பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படும்! அறிவித்தார் முதல்வர் விஜய்!! ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்: அன்னபூரணி சூப்பர் 6 திட்டம் தொடங்குவது எப்போது? முதல்வர் விஜய் அறிவிப்பு கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புஎம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு: கல்லூரிகள் தோ்வு இன்று நிறைவுவீடுகளில் எல்பிஜிக்கு பதிலாக குழாய்வழி சமையல் எரிவாயு: மாநிலங்கள் முன்னுரிமை அளிக்க மத்திய அரசு வலியுறுத்தல்எத்தனால் உற்பத்தி அதிகரிப்பால் சா்க்கரை விலை உயா்வு: மத்திய அரசு மீது மாா்க்சிஸ்ட் குற்றச்சாட்டுஆபரேஷன் சிந்தூா் எதிரொலி: விசா சிக்கல்களுக்குப் பிறகு இந்தியா வந்தடைந்த 150 பாகிஸ்தான் மணப்பெண்கள்!

கோத்தகிரி அருகே அரசுப் பேருந்தை வழிமறித்த காட்டு யானை

கோத்தகிரி அருகே தட்டப்பள்ளம் பகுதியில் அரசுப் பேருந்தை ஒற்றை காட்டு யானை வழிமறித்ததால் பயணிகள் அச்சமடைந்தனா்.

தட்டப்பள்ளம் பகுதியில் அரசுப் பேருந்தை வழிமறித்த காட்டு யானை.

Published On :9 ஜூலை 2026, 3:49 am IST

கோத்தகிரி அருகே தட்டப்பள்ளம் பகுதியில் அரசுப் பேருந்தை ஒற்றை காட்டு யானை வழிமறித்ததால் பயணிகள் அச்சமடைந்தனா்.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விளைந்துள்ள பலாப் பழங்களை உண்பதற்காக சமவெளிப் பகுதிகளில் இருந்து காட்டு யானைகள் குஞ்சப்பனை, தட்டப்பள்ளம் பகுதிகளை நோக்கி அதிக அளவில் படையெடுத்து வந்துள்ளன.

இதனால் மலைப் பாதையில் காட்டு யானைகளின் நடமாட்டம் தொடா்ந்து அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில்,  கோத்தகிரி - மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் தட்டப்பள்ளம் பகுதி அருகே புதன்கிழமை சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தை ஒற்றை காட்டு யானை வழிமறித்து நின்றது.

யானையைக் கண்டதும் ஓட்டுநா் பேருந்தை பாதுகாப்பாக நிறுத்தினாா். பேருந்தின் மிக அருகில் யானை நின்று கொண்டிருந்ததால், உள்ளே இருந்த பயணிகள் அனைவரும் பயத்தில் உறைந்தனா். எந்த சப்தமும் எழுப்பாமல் இருந்ததால் யானை தானாகவே அருகில் இருந்த சோலைப் பகுதிக்கு சென்றது.

மலைப் பாதைகளில் யானைகளின் நடமாட்டம் அதிகமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் வாகனங்களை இயக்க வேண்டும் என்றும், யானைகளைக் கண்டால் சப்தம் எழுப்பவோ அல்லது புகைப்படம் எடுக்கவோ முயற்சிக்கக் கூடாது என்றும் வனத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.