103 பேர் அல்லர்; வெள்ளத்தின்போது நேபாளத்தில் இருந்தது 400 தமிழர்கள்! அமைச்சர் ராஜ்மோகன் தகவல்
நேபாள வெள்ளத்தின்போது அங்கிருந்தவர்கள் 400 தமிழர்கள் என்று அமைச்சர் ராஜ்மோகன் தகவல் தெரிவித்துள்ளார்.

நேபாள வெள்ளத்தின்போது அங்கிருந்தது 103 தமிழர்கள் என்று இதுவரை தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், வெள்ளப்பெருக்கின்போது 400 தமிழர்கள் இருந்ததாக தமிழக அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.
400 பேரில், 21 மட்டுமே தற்போது சென்னை திரும்பியிருக்கிறார்கள். தேசமங்கையர்கரசி உள்பட 148 பேர் காத்மாண்டுவில் பத்திரமாக இருக்கிறார்கள். இவர்கள் விரைவில் சென்னை திரும்புவார்கள். ஆனால் சுமார் 90 பேர் நிலைமை என்னவானது என்பது குறித்த தகவல்கள் இல்லை என்று கூறப்படுகிறது.
நேபாள பெரு வெள்ளத்தின்போது, தமிழ்நாட்டிலிருந்து நேபாளம் சென்று, அங்கு சிக்கிக் கொண்டதாக மேலும் பலரின் தகவல்கள் தற்போது வெளியாகி வருகிறது.
இதனால், நேபாளத்தில் இருந்த தமிழர்களின் எண்ணிக்கை தற்போது 400 என்று தெரிய வந்திருப்பதாக தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.
கும்பகோணம், சென்னை ஏஜென்ஸிகள் மூலம் வியாழக்கிழமை வரை 103 பேர் நேபாளம் சென்றதாக மட்டுமே அறியப்பட்டிருந்தது. இதில், கும்பகோணம் ஏஜென்ஸி மூலம் சென்ற 21 மட்டுமே உயிருடன் இருப்பதாகத் தகவல்கள் கிடைத்து அவர்கள் பத்திரமாக சென்னை வந்து சேர்ந்தனர். இவர்களது பாஸ்போர்ட் வெள்ளத்தில் சென்றுவிட்டதால் இவர்களுக்கு புதிய பாஸ்போர்ட் வழங்க ஏற்பாடு செய்யப்படும்.
நேபாளத்தில் நடக்கும் மீட்புப் பணிகளை ஆய்வு செய்ய தில்லி சென்றிருக்கும் தமிழக அமைச்சர்கள் குழுவில் இடம்பெற்றுள்ள ராஜ்மோகன், நேபாளத்தில், இதுவரை தகவல் தெரியாமல் இருக்கும் தமிழர்களின் நிலையை கண்டறிவது மிகப்பெரிய சவாலாக உள்ளதாகக் கூறியிருக்கிறார்.
மேலும், தமிழகத்திலிருந்து ரயில் மூலம் நேபாளம் சென்ற 140 பேர் குறித்து தகவல் கிடைத்துள்ளது. இது மட்டுமல்லாமல், சிறு சிறு குழுக்களாக தமிழர்கள் நோபளம் சென்றிருக்கிறார்கள். அவர்களது விவரங்களையும் அறியும் பணி நடந்து வருகிறது.
தற்போது வரை 400 பேர் நேபாளம் சென்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 140 பேர் பத்திரமாக உள்ளனர். 21 பேர் ஊர் திரும்பிவிட்டார்கள். 90 பேரின் நிலைமை என்னவானது என்று தெரியவில்லை. அவர்களை கண்டுபிடிக்கும் பணி நடந்து வருகிறது.
வெள்ளத்தால், நேபாளத்தில் தொலைத்தொடர்பும் பாதிக்கப்பட்டிருந்தது. தற்போது நிலைமை சீரடைந்து வருவதால் விரைவில் மற்றவர்கள் தகவல்களும் கிடைக்கப்பெறும் என எதிர்பார்பப்தாக அமைச்சர்கள் கூறியுள்ளனர்.
Summary
Not 103, but 400 Tamils were in Nepal during the floods! Minister Rajmohan reveals.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





