FOLLOW US

ON GOOGLE DISCOVER

புழல் காவல் நிலையத்தில் முதல்வர் விஜய் ஆய்வு! நேபாள வெள்ளத்தில் 320 இந்தியர்கள் மாயம்! வெளியுறவு அமைச்சகம் அதிர்ச்சித் தகவல்!எந்தத் திட்டம் கொண்டு வந்தாலும் விவசாய நிலத்தைதான் எடுத்தாக வேண்டும்! செங்கோட்டையன்திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதி இடைத்தேர்தலுக்கான தடையை நீக்கக் கோரி முதல்வர் விஜய் மனுசென்னை புழல் சிறை முதல்வர் விஜய் திடீர் ஆய்வுமாநில அந்தஸ்து! பதவியை ராஜிநாமா செய்யவும் தயார்: புதுவை முதல்வர் என். ரங்கசாமி

நேபாளத்தில் சிக்கியிருக்கும் எஞ்சியுள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை: அமைச்சர் ராஜ்மோகன்

நேபாளத்தில் இருந்து தமிழர்கள் மீட்கப்பட்டது குறித்து அமைச்சர் ராஜ்மோகன் அளித்த விளக்கத்தில்.....

Action being taken to rescue the remaining Tamils stranded in Nepal: Minister Rajmohan

அமைச்சர் ராஜ்மோகன்

Published On :28 ஆகஸ்ட் 2026, 6:33 pm IST

நேபாளத்தில் இருந்து தமிழர்கள் மீட்கப்பட்டது குறித்து அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம் அளித்துள்ளார்.

நேபாளத்தில் இருந்து மீட்டு தில்லி அழைத்து வரப்பட்ட 21 தமிழர்களை வரவேற்ற பிறகு அவர் அளித்த பேட்டியில், தமிழகத்தில் இருந்து 400 பேர் வரை நேபாள் சென்றுள்ளனர். அதில் ஏறத்தாழ 90 பேரை இதுவரை தொடர்புகொள்ள முடியவில்லை.

தமிழர்களை மீட்டு கொண்டு வந்த அனைவருக்கும் நன்றி. நேபாள பெருவெள்ளத்தில் சிக்கி மீட்கப்பட்ட 21 தமிழர்கள் தில்லி அழைத்துவரப்பட்டனர். இன்றிரவு 8 மணிக்கு தில்லியில் இருந்து சென்னை புறப்படுகின்றனர். நேபாளத்தில் சிக்கியிருக்கும் எஞ்சியுள்ள தமிழர்களை மீட்டுவர நடவடிக்கை எடுத்துள்ளோம்.

கும்பகோணம், தஞ்சையைச் சேர்ந்தவர்கள் நேபாளத்தில் சிக்கியுள்ளனர். தமிழர்களை மீட்டுக் கொண்டு வருவதில் வெளியுறவுத் துறையுடன் தொடர்பில் இருக்கிறோம். மீட்கப்பட்ட தமிழர்கள் பலர் வெள்ளத்தில் தங்களது பாஸ்போர்ட்டை இழந்துள்ளனர்.

அவர்கள் இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை என்று தெரிவித்தார்.

Summary

Minister Rajmohan has provided an explanation regarding the rescue of Tamils from Nepal.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.