
கூட்டுறவு சங்கங்களில் பயிர்க் கடன் வசூல் முற்றிலும் தற்காலிக நிறுத்தம்: தமிழ்நாடு அரசு
கூட்டுறவு சங்கங்களில் பயிர்க் கடன் வசூல் நிறுத்தப்பட்டது குறித்து...
தமிழ்நாடு அரசு - கோப்புப் படம்
கூட்டுறவு சங்கங்களில் வழங்கப்பட்ட பயிர்க் கடன்களின் வசூல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெற்றிருக்கும் பயிர்க் கடன் எவ்வளவு தொகையாக இருந்தாலும், அதன் வசூலை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக கூட்டுறவுத் துறை தரப்பில் அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த சுற்றறிக்கையை மண்டல இணைப் பதிவாளர்கள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளின் மேலாண்மை இயக்குநர்களுக்கு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சார்பில் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், இதனைத் தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சில விவசாயிகளிடம் தொலைபேசி வாயிலாக கடன்களை வசூலிக்க முயற்சிப்பதாகப் புகார்கள் எழுந்ததாகவும், இதன் காரணமாகவே தற்காலிகமாக வசூல் நிறுத்தப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும், நிலுவையிலுள்ள பயிர்க் கடன்களை வசூலிப்பது தொடர்பாக கூட்டுறவு சங்கத்தில் இருந்து யாரேனும் தொடர்புகொண்டால், அவர்களின் கைப்பேசி எண் மற்றும் கூட்டுறவு சங்கத்தின் விவரங்களை கூட்டுறவுத் துறையின் அதிகாரபூர்வ குறைதீர்வு எண்ணான 98840 00845 என்ற வாட்ஸ் ஆப் எண்ணில் புகார் அளிக்கலாம் என விவசாயிகளுக்கு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary
The Tamil Nadu government has announced a complete, temporary suspension of crop loan recovery in cooperative societies
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






