விரைவில் பிளாஸ்டிக் ரூ.10, ரூ.20 தாள்கள்! புழக்கத்தில் இருக்கும் பணம் என்னவாகும்?நிலவில் மோதிய ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் பகுதி! அதிர்ச்சி விடியோ! எவ்வளவு பெரிய பள்ளம்?அடுத்த ஜென்மம் எதற்கு? இப்போதே விவசாயிகளுக்கு செய்யலாமே! பிரேமலதாதைரியம் இருந்தால் முதல்வர் வாயைத் திறக்கட்டும்! உதயநிதி சவால்! வறட்சி பற்றி பேசாமல், புகழ்ச்சி பாடி முதல்வரின் உச்சிகுளிர பாராட்டு மழை: ஸ்டாலின்வளமான தமிழ்நாட்டை நோக்கிய நமது வெற்றிப் பயணம் தொடரட்டும்: முதல்வர் விஜய்உருப்படியாக எதுவுமில்லை! வேளாண் பட்ஜெட்டை விமர்சித்த உதயநிதி! அமைச்சர் ஆனந்துடன் எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் அணி சந்திப்பு!கரூரில் தென்னை நாற்றுப்பண்ணை! பட்ஜெட்டில் தென்னை, பனை பாதுகாப்புத் திட்டங்கள்!வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு மிகப்பெரிய ஏமாற்றம்: எடப்பாடி பழனிசாமிதஞ்சாவூரில் நம்மாழ்வார் வேளாண் பாலிடெக்னிக் கல்லூரி! பட்ஜெட்டில் அறிவிப்பு!எல் நினோவால் 12 மாவட்டங்கள் பாதிக்கப்படும் அபாயம்! அமைச்சர் வினோத் உரைதமிழக வேளாண் பட்ஜெட்! வெற்றி விவசாய விருதுகள் அறிவிப்புஉயிர்ம உர விவசாயத்தில் சிறந்து விளங்குவோருக்கு நம்மாழ்வார் விருதுவிவசாயிகளின் இலவச மின்சாரத்துக்கு ரூ. 7,432 கோடி ஒதுக்கீடு!
/

இனிக்க, இனிக்க பேசி விவசாயிகளை ஏமாற்றிவிட்டது தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி

வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு மிகப்பெரிய ஏமாற்றமே மிஞ்சியிருப்பதாக அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளதைப் பற்றி...

News image

எடப்பாடி பழனிசாமி.

Updated On :6 ஆகஸ்ட் 2026, 1:05 pm IST

வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு மிகப்பெரிய ஏமாற்றமே மிஞ்சியிருப்பதாக அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழக அரசின் முதல் தமிழ்நாடு வேளாண் நிதிநிலை அறிக்கையை அமைச்சர் ஆர். வினோத் இன்று (ஆக.6) சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். நிதிநிலை அறிக்கையை அமைச்சர் வினோத் சுமார் 130 நிமிடங்கள் வாசித்தார்.

பல்வேறு புதிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டிருந்தாலும், தவெக அரசின் வாக்குறுதிகளாக 100 சதவிகித பயிர்க்கடன் தள்ளுபடி, கரும்புக்கான ஆதார விலை ரூ. 4,500 ஆக உயர்த்துவது தொடர்பான அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை.

இந்த நிலையில், வேளாண் நிதிநிலை தாக்கல் செய்யப்பட்ட பின்னர், அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் பேசுகையில், “நேற்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இன்று இரண்டாவது நாளாக வேளாண் பட்ஜெட்டை தவெக அரசு தாக்கல் செய்திருக்கிறது. விவசாயிகள் எல்லாம் வேளாண் பட்ஜெட்டுக்காக பெரும் எதிர்பார்ப்போடு இருந்தார்கள். ஆனால், இந்த வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு மிகப்பெரிய ஏமாற்றம்தான் மிஞ்சியிருக்கிறது.

கடந்த கால திமுக ஆட்சியில் வேளாண் பட்ஜெட் என்று அறிவிக்கப்பட்டு, 20 துறைகள் ஒன்றாக இணைக்கப்பட்டு வேளாண் பட்ஜெட் என்று தாக்கல் செய்தார். வேளாண் அமைச்சர் சுமார் இரண்டரை மணிநேரம் நிதிநிலை அறிக்கையை வாசித்தார். அதில், முக்கியமாக எந்தத் திட்டமும் இடம்பெறவில்லை.

விவசாயிகளுக்கு பயனளிக்கக்கூடிய திட்டம் எதுவும் இல்லை. ஏற்கனெவே, ஒவ்வொரு ஆண்டும் வேளாண் மானியக் கோரிக்கை நடைபெறுகின்ற போது என்ன அறிவிப்பு இருந்ததோ, அதேதான் வேளாண் பட்ஜெட்டிலும் இடம்பெற்றிருக்கிறது. திமுகவின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டி, தவெக அரசு வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கிறது. புதியதாக எதுவுமே இல்லை.

தேர்தல் நேரத்தில் ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ. 3,500 தருவதாகவும், ஒரு டன் கரும்புக்கு ஆதார விலையாக ரூ. 4,500 தருவதாகவும் தெரிவித்திருந்தார்கள். சாகுபடியாளர் உரிம அட்டை மூலம், குத்தகை விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ. 10,000 நேரடி முதலீட்டு உதவி வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தார்கள். ஆனால், அதுதொடர்பான எந்த அறிவிப்புகளும் வெளியாகவில்லை. இனிக்க, இனிக்க பேசி விவசாயிகளை ஏமாற்றிவிட்டது தவெக அரசு” என்றார்.

Summary

AIADMK General Secretary Edappadi Palaniswami has stated that the agriculture budget has left farmers with nothing but deep disappointment.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.