நடுவானில் துபை விமானத்தில் கத்திக்குத்து! தாக்கப்பட்ட விமானி இந்தியரா?தேர்தல் மூலம் மாநிலங்களை பாஜகவுக்கு தாரைவார்த்தவர் ஞானேஷ் குமார்: காங்கிரஸ்3 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து ரூ. 95.81 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!இ-கேஒய்சி முடிக்கவில்லை என்றாலும்... குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருள்கள் நிறுத்தப்படாது: தமிழக அரசுதிமுகவினருக்கு மறதி அதிகம்: தாராபுரம் பிரசாரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஇஸ்ரேல் சென்ற விமானம் சௌதியில் தரையிறக்கம்! நடுவானில் விமானியைக் கொல்ல முயன்ற சக விமானி?கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!எம்மதமும் சம்மதம் மட்டுமல்ல எம்மதமும் நம்மதம்! முதல்வர் விஜய் பேச்சு!பேசும்போது மேடையில் கண்கலங்கிய சத்தியபாமா: ஆறுதல் சொன்ன முதல்வர் விஜய்!தவெகவில் இணைந்தார் செம்மலை! கட்சித் துண்டு அணிவித்த முதல்வர் விஜய்!ஜனநாயகத்தை சீர்குலைத்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்! ராகுல்

இபிஎஸ் நடத்தி வருவது ஒரு கார்ப்பரேட் கம்பெனி: செங்கோட்டையன்

எடப்பாடி பழனிசாமி நடத்தி வரும் அதிமுக ஒரு கார்ப்பரேட் கம்பெனி என அமைச்சர் செங்கோட்டையன் விமர்சித்தது குறித்து...

Edappadi Palaniswami | KA Sengottaiyan

எடப்பாடி பழனிசாமி | செங்கோட்டையன் - கோப்புப் படம்

Published On :

எடப்பாடி பழனிசாமி நடத்தி வரும் அதிமுக ஒரு கார்ப்பரேட் கம்பெனி என அமைச்சர் செங்கோட்டையன் விமர்சித்துள்ளார்.

ஊழல் சக்திகளையும் தீய சக்திகளையும் தவெக இணைத்துக் கொண்டதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்ததற்கு அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளித்துள்ளார்.

இதுகுறித்து, செய்தியாளர்களுடன் அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது, எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் நடத்தியதுதான் இயக்கம். இப்போது இபிஎஸ் நடத்திக் கொண்டிருப்பது ஒரு கார்ப்பரேட் கம்பெனி. அவர் மகன் உள்ளிட்ட 5 பேரின் கருத்துகளை மட்டும் அவர் கேட்பதாலேயே, ஒவ்வ்வொருவராக ராஜிநாமா செய்து வருகின்றனர்.

வழக்கு போடுவது வேறு; தண்டனைக்குட்படுவது வேறு. எல்லோர் மீதும்தான் வழக்கு போடுகின்றனர். தண்டனைக்குட்பட்டவர்களா என ஆய்வு செய்ய வேண்டும். ஆகையால், தண்டனைக்குட்பட்டவர்களைக் கட்சியில் சேர்ப்பதுதான் தவறு என்று தெரிவித்தார்.

மேலும், தவெகவில் இணைவதற்கு மிரட்டப்பட்டதாக அனிதா ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டியது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது, தவறு செய்பவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. அனிதா ராதாகிருஷ்ணன் ராஜிநாமா செய்ய வேண்டும் எனச் சொல்லி யாரும் வற்புறுத்தவில்லை.

யார் வற்புறுத்தினார்கள் என்று அவர் தெளிவாக எடுத்துச் சொல்ல வேண்டும் என்று தெரிவித்தார்.

Summary

Minister Sengottaiyan criticizes the AIADMK led by Edappadi Palaniswami, describing it as a corporate company

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.