காவிரி குறுக்கே மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு மாநில அரசு அனுமதிக்கக் கூடாது என சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது, "கர்நாடக அரசு மேக்கேதாட்டு அணை கட்டுவது தொடர்பாக அதனைத் தடுத்து நிறுத்துவதற்கு பல்வேறு காலகட்டங்களில் அதிமுக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே பெங்களூரு நகரின் குடிநீர்த் தேவை உள்பட பிற பயன்பாட்டுக்காகவும் 14.75 டிஎம்சி நீரை கர்நாடக அரசுக்குக் கூடுதலாக அளித்து உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில், மீண்டும் பெங்களூரு குடிநீர்த் தேவைக்கென 67 டிஎம்சி நீர் கொள்ளளவு கொண்ட மேக்கேதாட்டு அணையைக் கட்ட கர்நாடக அரசு முயற்சிப்பது, தமிழ்நாட்டை பாலைவனமாக்கும் உள்நோக்கம் கொண்ட ஒரு செயலாகும்.
இந்த அணை கட்டப்பட்டால், தமிழக மக்களின் வாழ்வாதாரமும் உரிமையும் கடுமையாக பாதிக்கப்படும். மேலும், நீர்ப் பற்றாக்குறை ஏற்படும் ஆண்டுகளில் கடந்த காலங்களைப் போலவே காவிரி நீரை முழுமையாக தனது உபயோகத்துக்காக கர்நாடகம் பயன்படுத்தும் நிலை உருவாகும்" என்று தெரிவித்தார்.
Summary
Attempt to build the Mekedatu dam is an act driven by the ulterior motive of turning Tamil Nadu into a desert, says Edappadi Palaniswami
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேக்கேதாட்டு அணை: கர்நாடகத்தைவிட தமிழ்நாட்டுக்குத்தான் அதிகம் உதவும் - டி.கே. சிவகுமார்

மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி

அரசு இல்லத்தை காலி செய்தார் எடப்பாடி பழனிசாமி! ராயப்பேட்டையில் குடியேறினார்!

மேக்கேதாட்டு அணை விவகாரம்: கர்நாடக காங்கிரஸை எதிர்த்து பேச முடியுமா? தவெக அரசுக்கு இபிஎஸ் கேள்வி
விடியோக்கள்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK



