எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலும் இதேபோல் மின்வெட்டு இருந்துள்ளது என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். .
இதுகுறித்து அவர் கோவையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், எடப்பாடி பழனிசாமி ஆட்சி காலத்திலும் மின்வெட்டு இருந்திருக்கிறது. வெயில் காலம் என்பதால் மின்சாரத்தின் தேவை அதிகமாக உள்ளது. கூடுதல் மின்சாரம் பயன்படுத்தும் போது உபகரணங்களும், கட்டுமானப் பணிகளும் தேவை.
திமுக ஆட்சியில் மொத்தமாகவே மின்திட்டத்திற்கு ரூ.627 கோடி மட்டும்தான் செலவு செய்துள்ளார்கள். சென்னையில் 3,500 மெகாவாட் மின்சாரத்தை பயன்படுத்துவதற்காக கட்டுமானங்களே இருக்கிறது. ஆனால் அங்கு மக்கள் 5,000 மெகாவாட் பயன்படுத்துகின்றனர்.
திமுக ஆட்சியில் மின்சாரத் துறையான வளர்ச்சி பணிகளை செய்யவில்லை. மேக்கேதாட்டு அணை கட்டக்கூடாது என்பதில் முதல்வர் தெளிவாக உள்ளார். மேக்கேதாட்டு விவகாரத்தில் தமிழ்நாட்டின் குரலை எங்கு எடுத்துச் செல்ல வேண்டுமோ, முதல்வர் விஜய் அங்கு எடுத்துச் சென்றுள்ளார்.
மேட்டூர் அணைக்கு வரும் நீர் குறைவாக உள்ளது. விவசாயிகளை காக்க, காவிரியில் கூடுதல் நீரை விட வேண்டும் என முதல்வர் வலியுறுத்தி உள்ளார். இவ்வாறு குறிப்பிட்டார்.
Summary
Revenue Minister Sengottaiyan has provided a clarification regarding the prevailing power outage issue in Tamil Nadu.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.







