எனது மகன் மிதுன் அரசியலுக்கு வரமாட்டார் என்பதை மீண்டும் அழுத்தம் திருத்தமாக சொல்கிறேன் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வியாழக்கிழமை தெரிவித்தார்.
தமிழ்நாட்டின் 17-ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியது. புதிய அரசின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகரின் உரையாற்றினார்.
இதனைத் தொடர்ந்து சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, ஆளுநர் உரையில் முதல்வர் தில்லி சென்று திரும்பியதும், வெள்ளை அறிக்கையில் இடம்பெற்றதும்தான் இருந்தது. எதிர்பார்த்த புதிய திட்டங்கள் எதுவும் இல்லை என்று விமர்சித்திருந்தார்.
மேலும், தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற 38 நாள்களில் 150 போக்ஸோ வழக்குகள், பெண்களுக்கு எதிரான 126 பாலியல் குற்றங்கள், 130 கொலை வழக்குகள் ஆகியவை பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதனிடையே, எனது மகன் மிதுன் அரசியலுக்கு வரவுள்ளதாக வெளியாகும் செய்திகள் தவறானது என்று அவர் விளக்கம் அளித்தார்.
மேலும், அதிமுக கட்சியில் அவர் வெறும் அடிப்படை உறுப்பினர் மட்டுமே, பொறுப்புகளுக்கு வரமாட்டார் என்பதை மீண்டும் அழுத்தம் திருத்தமாக தெரிவித்துக் கொள்கிறேன் எனத் தெரிவித்தார்.
முன்னதாக, எடப்பாடி பழனிசாமியின் மகன் மிதுனுக்கு கட்சியின் இளைஞரணி செயலாளர் அல்லது தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் போன்ற முக்கிய பதவி கொடுக்க திட்டமிடப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
Summary
My son will not enter politics — Edappadi Palaniswami
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது








