தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரை 3 நாள்கள் நடத்த அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
தவெக அரசின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று (ஜூன் 18) தொடங்கியுள்ளது. புதிய அரசின் முதல் கூட்டத்தொடர் என்பதால் மாநில ஆளுநா் ஆர்.வி. ஆா்லேகர் உரையாற்றினார்.
இதன்பின்னர் சட்டப்பேரவை வளாகத்தில் அலுவல் ஆய்வுக்குழுக் கூட்டம் நடைபெற்றது.
இதில் முதல்வர் விஜய், பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர், அமைச்சர்கள் கூட்டணி கட்சி உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
இதையடுத்து சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் ஜூன் 19, 22, 23 ஆகிய 3 நாள்கள் நடத்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் தெரிவித்தார்.
மேலும், "ஜூன் 23 ஆம் தேதி ஆளுநர் உரை மீதான விவாதத்திற்கு முதல்வர் விஜய் பதிலளிக்கிறார்.
பேரவை நிகழ்வின் தொடக்கத்திலும் முடிவிலும் 2 முறை தேசிய கீதம் பாடப்பட்டது சரியானதுதான். இந்த நடைமுறையே தொடர்வது நலமாக இருக்கும்.
ராஜிநாமா செய்த அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் பதில் அளித்திருக்கிறார்கள். அது ஆய்வில் உள்ளது. ஆய்விற்குப் பின்னர் முடிவெடுக்கப்படும்" என்றார்.
Summary
TN Assembly session will be function 3 days upto june 23: speaker
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நெல்லையில் காவல் துறை ஆய்வுக் கூட்டம்

கன்னியாகுமரியில் மை பாரத் ஆய்வுக் கூட்டம்
நாளை பேரவை கூடுகிறது! அலுவல் ஆய்வுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்பவர்கள் யார்யார்?
ஜூன் 18ல் ஆளுநர் உரையுடன் தமிழக சட்டப்பேரவை கூடுகிறது!
விடியோக்கள்

வியத்நாம் படகு விபத்தில் தப்பித்தது எப்படி? உயிர்தப்பிய நிர்மல் குமார் பேட்டி | Vietnam boat tragedy

மணமாலை வரம் தரும் முருகன் | Kalyana Kandha swamy Kovil | Madipakkam | கல்யாண கந்தசுவாமி கோயில்| கோயில் வலம் -3

தவெகவில் இணைய என்னை யாரும் அழைக்கவில்லை! - எம்.ஆர். விஜயபாஸ்கர் விளக்கம் | TVK | ADMK


