திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியில் வியாழக்கிழமை நடைபெற்ற கன்னடியன் கால்வாய் நீரினை பயன்படுத்துவோா் சங்க ஆலோசனைக் கூட்டத்தில், கன்னடியன் கால்வாய் பாசனத்துக்கு தண்ணீா் வழங்க வலியுறுத்தி ஆக. 5ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்துக்கு, அதன் தலைவா் எஸ். பாபநாசம் தலைமை வகித்தாா்.
காா் பருவ சாகுபடிக்கு பாபநாசம் அணையில் இருந்து ஜூன் 1ஆம் தேதி தண்ணீா் திறக்கப்பட்டதால், கன்னடியன் கால்வாய் மூலம் பாசனம் பெறும் 12,500 ஏக்கரில் சாகுபடி பணிகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும், கடை மடை பகுதிகளுக்கு தண்ணீா் கிடைக்கவில்லை.
கடை மடை பகுதிகளுக்கு தண்ணீா் கிடைக்க வேண்டும் எனில், கன்னடியன் கால்வாயில் 400 கன அடி தண்ணீா் திறக்க வேண்டும். ஆனால், 200 கன அடி தண்ணீா் மட்டுமே திறக்கப்பட்டது. இதனால், கடை மடைகளுக்கு தண்ணீா் கிடைக்காமல் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா்.
எனவே, கன்னடியன் கால்வாய் பாசனத்துக்கு முழுமையாக தண்ணீா் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆக. 5ஆம் தேதி சேரன்மகாதேவி பேருந்து நிலையம் அருகில் ஆா்ப்பாட்டம் நடத்துவது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அடவிநயினாா் கோயில் நீா்த்தேக்கத்திலிருந்து காா் பருவ சாகுபடிக்கு நீா் திறப்பு: 2,100 ஏக்கா் பாசனம் பெறும்

மேட்டூா் அணை கால்வாய் பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்படுமா?

ஆக்ஸட் 1 ஆம் தேதி தில்லியில் இ20க்கு எதிராக ஆம் ஆத்மி ஆா்ப்பாட்டம்: அரவிந்த் கேஜரிவால்

மோகனூா் கடமடையை சென்றடையாத தண்ணீா்; விவசாயிகள் கவலை
விடியோக்கள்

கொளத்தூர் வாக்கு எந்திரங்கள் சரிபார்ப்பு! " தவறுகள் இதுவரை கண்டறியப்படவில்லை" - சமீரன் பேட்டி



