‘வந்தே மாதரம் முழுமையாகப் பாடப்போவதில்லை’ - கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் உறுதிமேட்டூர் அணையை ஆக. 28-ல் திறந்து வைக்கிறார் முதல்வர் விஜய்! ஏற்பாடுகள் தீவிரம்!தமிழ்நாட்டில் வேகமெடுக்கும் பன்றிக் காய்ச்சல் பரவல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை!தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை! மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்!பாகிஸ்தானின் மிகப்பெரிய மருத்துவமனையில் தீ! 15 பச்சிளம் குழந்தைகள் பலி! மோகன் பாகவத்தின் நியூயார்க் நிகழ்வுக்கு மேயர் மம்தானி எதிர்ப்பு!மலையாளச் சொந்தங்களுக்கு இதயங்கனிந்த ஓணம் வாழ்த்துகள்! முதல்வர் விஜய்‘மகாபலியின் மண்ணில் சமத்துவம் மலரட்டும்: மனமார்ந்த ஓணம் வாழ்த்துக்கள்!’ - மு.க.ஸ்டாலின்குழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிநாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறை

தமிழ்நாட்டில் வேகமெடுக்கும் பன்றிக் காய்ச்சல் பரவல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் பன்றிக் காய்ச்சல் பரவல் அதிகரித்திருப்பது பற்றி...

swine flu

பன்றிக் காய்ச்சல் - கோப்புப்படம்

Published On :26 ஆகஸ்ட் 2026, 12:12 pm IST

தமிழ்நாட்டில் எச்1என்1 என்ற பன்றிக் காய்ச்சல் வேகமாகப் பரவத் தொடங்கியிருக்கும் நிலையில், மாநில சுகாதாரத்துறை முன்னெச்சரிக்கை வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் பருவமழைக் காலத்தில் ஏற்படும் எச்1என்1 (பன்றிக்) காய்ச்சல், இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் காய்ச்சல் போன்ற தொற்றுகள் வேகமாகப் பரவத் தொடங்கியுள்ளன.

தில்லி, கேரளம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் ஆயிரக்கணக்கானோருக்கு பன்றிக் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளன.

இதையடுத்து நாடு முழுவதும் அனைத்து மாநில அரசுகளுக்கும் பன்றிக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய சுகாதார அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த ஜனவரி மாதம் 19 ஆக இருந்த பன்றிக் காய்ச்சல் பாதிப்பு, தற்போது 339 ஆக அதிகரித்துள்ளது. பலருக்கு பன்றிக் காயச்சல் உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், சளி, இருமல், காய்ச்சல், தொண்டை வலி, உடல்சோர்வு போன்ற அறிகுறிகள் இருப்பவர்கள் தானாக மருந்தகங்களில் மருந்துகளை வாங்கி சாப்பிட்டு அலட்சியமாக இருக்கக் கூடாது என தமிழ்நாடு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையில் பரிசோதனை செய்து சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பன்றிக் காய்ச்சலால் பாதித்தவர்களின் எச்சில் துளி போன்றவற்றால் அது பரவும் என்பதால், நோயாளிகளுக்கு அருகில் இருப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும், கூட்ட நெரிசல் மிகுந்த பகுதிகளில் முகக்கவசம் அணிந்து செல்லுமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

Summary

Swine flu spread in Tamil Nadu - Health Department issues warning!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.