வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

31.8.1976: தமிழ்நாட்டில் பசுவதைக்கு தடை - மாநில அரசு உத்திரவு

அரை நூற்றாண்டுக்கு முன், தினமணி நாளிதழில் இன்றைய நாளில் வெளியான முக்கிய செய்தி.

half century ago

31.8.1976 - Dinamani

Published On :

சென்னை, ஆக. 30 - தமிழ்நாட்டில் பசுக்கள், கிடாரிக் கன்றுகள் வதைக்குத் தடை விதித்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வரும் என்று அரசாங்க செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.

அரசாங்க அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ்நாட்டில் பசுவதை தடை செய்யப்படுகிறது. பசுவதையைத் தடை செய்ய வேண்டும் என்று கோரி தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து அரசுக்குக் கோரிக்கைகள் வந்தன. பசுவதை காரணமாக கிராமங்களில் வசிக்கும் சிறிய விவசாயிகளுக்குக் கிடைக்கும் உபரி வருமானம் குறைவதுடன், பால் கொடுக்கும் பசுக்களின் தர வளர்ச்சி, எண்ணிக்கையும் பாதிக்கப்படுகிறது. மேலும் சாணி உரம் கிடைப்பது குறைகிறது.

ஆகவே பால் உற்பத்தியை அதிகரிக்கவும், கிராமப் பொருளாதாரத்தை முன்னேற்றவும் பசு வதையைத் தடை செய்ய வேண்டும் என்று அரசு கருதுகிறது. ஆகவே, பசுக்களையும், கிடாரிக் கன்றுகளையும் வதை செய்வதை அரசாங்கம் தடை செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. ...

சீன பூகம்பத்தில் 9 லட்சம் பேர் சாவு

ஹாங்காங், ஆக. 30 - சீனாவில் டாங்ஷன் பூகம்பத்தில் 9 லட்சம் பேர் இறந்தனர் என்று இங்கு கிடைத்த கடிதம் ஒன்று தெரிவிப்பதாக ஸ்தல தினசரி மிங் பாவோ இன்று தெரிவித்தது.

டாங்ஷன் பூகம்ப நிவாரண அதிகாரி, தனது பெற்றோர்கள் இறந்தது பற்றி இங்குள்ள அவரது உறவினருக்கு எழுதியிருக்கும் கடிதத்தில் இவ்வாறு கூறியுள்ளார் என்று பத்திரிகை கூறுகிறது.

ராணுவத்தினரின் முதல் பணி

மீட்பு பணிபுரிய ராணுவத்தினர் வந்ததும் முதல் நடவடிக்கையாக பாங்குகளை பாதுகாத்தனர் என்றும், திருடர்கள் சுட்டுக் கொல்லப்படுவர் என்று எச்சரித்தனர் என்றும் இப்பத்திரிகை தகவல் கூறுகிறது.

கடந்த ஜூலை 28 தேதி ஏற்பட்ட பூகம்பத்தில் டாங்ஷன் பூகம்ப மையப் பகுதியாக இருந்தது.

Summary

31.8.1976: Ban on cow slaughter in Tamil Nadu – State Government order.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER