புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

8.8.1976: தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ஓடத் துவங்கியது

அரை நூற்றாண்டுக்கு முன், தினமணி நாளிதழில் இன்றைய நாளில் வெளியான முக்கிய செய்தி.

half century ago

8.8.1976 - Dinamani

Published On :

சென்னை, ஆக. 7- சென்னைக்கும் டில்லிக்குமிடை அதிவேகமாகச் செல்லும் ரயிலான "தமிழ் நாடு எக்ஸ்பிரஸ்" இன்று காலை 6-15 மணிக்கு சென்டிரலிலிருந்து கிளம்பியது.

இந்த ரயில் 2188 கிலோமீட் டர் பிரயாணத்தை முப்பதே மணி நேரத்தில் முடித்து டில்லியை அடைந்து விடும். வழியில் விஜயாடா, நாகபுரி, போபால், ஜான்ஸி ஆகிய நான்கு இடங் களில் மட்டுமே நிற்கும்.

சென்னையிலிருந்து கிளம்பிய இந்தப் புதிய அதிவேக எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு ரயில்வே அமைச்சர் கமலபதி திரிபாடி பச்சைக்கொடி காட்டி துவக்கி வைத்து, அந்த ரயிலிலிலேயே அவரும் டில்லிக்குச் சென்றார்.

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடந்த இந்தப் புதிய ரயிலின் துவக்க விழாவில் ஆலோசகர் ஆர்.வி. சுப்ரமண்யம், எம்.பி.க்கள் உள்பட ஏராளமான பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இந்தத் துவக்க விழாவுக்கென்றே டில்லியிலிருந்து வந்திருந்த கமலபதி திரிபாடி பேசுகையில், இந்தப் புது ரயிலில் பிரயாண நேரம் 10 மணி குறைக்கப்பட்டிருப்பது தென்னாட்டு மக்களுக்கு ஒரு வரப்பிரசாத மென்றும், தமிழ் நாட்டு மக்கள் மட்டுமின்றி ஆந்திரா, மைசூர், கேரள மக்களும் இதனால் பலனடைவார்கள் என்றும் சொன்னார்.

ஜி.டி. எக்ஸ்பிரஸின் பிரயாண நேரமும் சுமார் இரண்டரை மணி குறைக்கப்படுவதாக திரிபாடி தெரிவித்தார். மற்ற மெயில், எக்ஸ்பிரஸ் டிரயின்களின் வேகத்தையும் அதிகரிக்கும் சாத்யக்கூறை ஆராயுமாறு ரயில்வே போர்டுக்குச் சொல்லியிருப்பதாகவும் அவர் கூறினார்.

தமிழ்நாடு எக்ஸ்பிரஸின் நேரத்தில் ஒரு சிறு மாறுதல் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை கவனிக்கப்படும் என்று திரிபாடி உறுதி கூறினார். மற்ற ரயில்களில் சென்னைக்கு வருவோர் தமிழ்நாடு எக்ஸ்பிரஸை பிடிக்க வசதியாக அடுத்த ரயில்வே கால அட்டவணையில் தேவையான மாறுதல்கள் செய்ய வேண்டியிருக்குமென்றார்.

தென் ரயில்வேயில் மின்சாரப் பற்றிக் பாதை திட்டங்களைப் குறிப்பிட்டு விஜயவாடா- சென்னை பாதை வேலை முன்னேறி வருகிறதென்றும், சென்னை- திருவள்ளூர் லயனையும் எடுத்துக் கொள்ளப் போவதாயும், நிதி வசதிக் குறைவால் இந்தப் பணிகள் சுணக்கமடைந்துள்ளன வென்றும் அடுத்த இரண்டு ஆண்டுகளில் போதிய நிதி கிடைத்து முன்னேற்றம் காண முடியும் என்று நம்புவதாகவும் சொன்னார். ...

செவ்வாய் கிரகத்தில் வைகிங் கலத்தின முக்கிய சோதனை

பாசடேனா (கலிபோர்னியா). ஆக. 7- செவ்வாய் கிரகத்தில் உயிரின் நுண்கூறுகள் உள்ளனவா என்பதைக் கண்டுபிடிக்க வைகிங் -1 விண்வெளிக் கலத்தில் உள்ள பரிசோதனைக் கூடம் இன்று சோதனையைத் தொடங்குகிறது.

40 பவுண்ட் எடையுள்ள ஸ்பெக்ட்ரோ மீட்டர் கருவி வைகிங்-1 சோதனைக் கூடத்தில் உள்ளது. அந்தக் கருவிதான் இந்தக் சோதனையைச் செய்யவிருக்கிறது.

வைகிங்-1 விண்வெளிக் கலத்தின் யந்திரக் கை சென்ற மாதம் 28-ந் தேதியன்று செவ்வாய் கிரக மேற்பரப்பில் உள்ள மண்ணைத் திரட்டியது என்று விஞ்ஞானகள் நம்புகிறார்கள். அந்த மண்ணைத் தான் ஸ்பெக்ட்ரோமீட்டர் கருவி சோதனை சேய்யும்.

செவ்வாய் கிரக மண்ணைப் பரிசோதனைக் கூடத்திற்குள் யந்திரக் கை தள்ளியிருக்கும் என்று நம்பப்படுகிறது. பரிசோதனைக் கூடத்திற்குள் அழுக்கு ஏதேனும் புகுந்துவிட்டதா என்று விஞ்ஞானிகளுக்கு நிச்சயம் இல்லை. யந்திரக் கையில் தற்போது கோளாறு ஏற்பட்டு முடங்கிக் கிடக்கிறது. ...

Summary

8.8.1976: The Tamil Nadu Express began operations.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.