கொழும்பு, ஆக. 5 - இலங்கை பார்லிமெண்ட் மெம்பரான தமிழர் சி. அருளம்பலம் நேற்று அவருடைய இல்லத்தில் சுடப்பட்டார். அவருக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது.
அவர் திருமதி மண்டார நாயகா அரசின் ஆதரவாளர். அவரை சுட்டவர்கள் யார் என்று தெரியவில்லை.
தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வட இலங்கையில் கோகுவில் என்ற இடத்தில் அவரது வீடு இருக்கிறது.
மண் வாரும் யந்திரக் கையில் மீண்டும் கோளாறு
பாசடேனா, ஆக. 5 - செவ்வாய்க் கிரகத்தில் இறங்கி ஆய்வு நடத்தி வரும் 'வைகிங்-1' லாண்டரின் மண் வாரும் யந்திரக் கையில் மறுபடியும் கோளாறு ஏற்பட்டுள்ளது.
செவ்வாய் மண்ணை இரண்டாம் முறையாக அள்ளி எடுத்துக் கொண்டு வரும்போது, இந்த யந்திரக் கை மேற்கொண்டு நகராமல் அப்படியே சிக்கிக் கொண்டது. இதனால் மேற்கொண்டு பல பரிசோதனைகள் பாதிக்கப்படும் என்று விஞ்ஞானிகள் அஞ்சுகின்றனர்.
ஒரு வேளை வைகிங் கலத்தின் மின்சார மோட்டாரில் ஏதேனும் கோளாறு காரணமாக இவ்வாறு இந்த யத்திரக் கை இடைவழியில் நகராமல் நின்று விட்டிருந்தால், இனிமேல் அது நகரவே நகராது என்று அமெரிக்காவில் "வைகிங்" திட்டத்தின் டைரக்டர் டாக்டர் தாமஸ்யங் செவ்வாயன்று கூறினார்.
வைகிங்கின் யந்திரக் கையில் இவ்வாறு கோளாறு ஏற்பட்டிருந்தாலும், அதன் "சமையலறை" பகுதியில் தொடர்ந்து சமையல் பணிகள் நடத்தப்படும் என்று அவர் கூறினார்.
செவ்வாய்க் கிரகத்தில் கரடு முரடுடான பரப்புகளைப் பற்றிய புகைப்படங்களை வைகிங் கலம் தொடர்ந்து பூமிக்கு அனுப்பியது.
வைகிங் கலம் இறங்கியுள்ள பகுதியின் ஒரு புறத்தில் மணல் மேடுகளும், மற்றோர் புறத்தில் கூர்மையான கரடு முரடுப் பாறைகளும் நிறைந்து இருப்பதை அந்தப் புகைப்படம் துல்லியமாகக் காட்டியது.
Summary
6.8.1976: Tamil MP shot in Sri Lanka.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

5.8.1976: பயிரைக் காக்க நீர்: கர்நாடகா - த.நா. உடன்பாடு

2.8.1976: செவ்வாயில் பெருமளவுக்கு ஆக்சிஜன்: வைகிங் தகவல்

28.7.1976: போக்குவரத்தை கண்காணிக்க மவுண்ட் ரோடில் டெலிவிஷன் காமிரா

22.7.1976: பாங்கில் பல கோடி கொள்ளை: 5 மைல் நீள சுரங்கப்பாதை வெட்டி உள்ளே புகுந்தனர்
விடியோக்கள்

புதிய திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி விவரங்கள்! விளக்கிய நிதித்துறைச் செயலாளர் | TVK




