
தமிழ்நாட்டின் அரசியல் இலக்கணத்தை எழுதிய அண்ணாவுக்குப் புகழ் வணக்கம்! - மு.க. ஸ்டாலின்
பேரறிஞர் அண்ணா பிறந்தநாளையொட்டி மு.க. ஸ்டாலின் பதிவு.
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் - எக்ஸ்/ திமுக
தமிழ்நாட்டின் அரசியல் இலக்கணத்தை எழுதிய அண்ணாவுக்குப் புகழ் வணக்கம் என்று பேரறிஞர் அண்ணா பிறந்தநாளையொட்டி திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாள் இன்று(செப். 15) தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
இது தொடர்பாக திமுக தலைவர் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:
”தமிழ்நாட்டின் அரசியல் இலக்கணத்தை எழுதிய பேரறிஞர் அண்ணாவுக்குப் புகழ் வணக்கம்!
தலைநிமிர்ந்த தமிழர்! தலைநிமிர்ந்த தமிழ்நாடு! என்ற இலட்சியத்தை நனவாக்கத் தமிழன்னையின் தனயனாகப் பிறந்து தாய்க்குப் பெயரிட்ட மாபெரும் தமிழ்க் கனவு அவர்!
பேரறிஞர் அண்ணா சுயமரியாதையில் - சமூகநீதியில் - மாநில உரிமையில் - தமிழ்ப்பற்றில் என்றென்றும் வாழ்வார்!” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
Summary
DMK leader M.K. Stalin paid tribute to 'Perarignar' Anna on his birth anniversary, hailing him as the one who defined the political grammar of Tamil Nadu.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






