பள்ளிகளுக்கு 3 வகையான ஸ்டிக்கர் ஒட்டப்படும்: ஆதவ் அர்ஜுனா பேச்சுகொளத்தூர் தொகுதியில் வி.எஸ். பாபு வெற்றியை எதிர்த்து மு.க. ஸ்டாலின் வழக்கு! பால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்தி வழங்க வேண்டும்: இபிஎஸ் பரந்தூர் விமான நிலைய அறிவிப்பு! திமுக உறுப்பினர்கள் வெளிநடப்புமத்திய பாதுகாப்பு அமைச்சக பெண் அதிகாரி கருவுற்றிருந்த நிலையில் மரணம்! அதிர்ச்சி காரணம்ஓணம் பண்டிகை: சபரிமலை கோயிலில் இன்று நடை திறப்பு கட்டணமில்லா மகளிர் பேருந்து திட்டம் எப்போது? பேரவையில் அறிவித்தார் முதல்வர் விஜய்!பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படும்! அறிவித்தார் முதல்வர் விஜய்!! ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்: அன்னபூரணி சூப்பர் 6 திட்டம் தொடங்குவது எப்போது? முதல்வர் விஜய் அறிவிப்பு

சென்னை அண்ணா நகரில் மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து பெண் பலி!

சென்னை அண்ணா நகரில் மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து பெண் பலியானது பற்றி...

Woman dies after falling into a stormwater drain pit in Chennai Anna Nagar

அண்ணா நகரில் மழைநீர் வடிகால் பள்ளம் | கலாவதி - X

Published On :24 ஆகஸ்ட் 2026, 1:56 pm IST

சென்னை அண்ணா நகரில் மழைநீர் வடிகால் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தவறி விழுந்து பெண் ஒருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அண்ணா நகரில் மழைநீர் வடிகால் பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டிருந்தது. நேற்று பெய்த மழையால் பள்ளத்தில் தண்ணீர் முழுவதுமாக தேங்கியிருந்தது.

இந்நிலையில் அதனைக் கவனிக்காத நிலையில் பெண் ஒருவர், தண்ணீர் நிரம்பிய பள்ளத்தில் தவறி விழுந்தார். அவர் பெயர் கலாவதி என்று தெரிய வந்துள்ளது.

அவர் பள்ளத்தில் விழுந்ததை அங்கிருந்தவர்கள் பார்த்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த பள்ளத்தின் அடியில் மின் வயர்கள் சென்றதால் மின்சாரத்தைத் துண்டித்த பிறகு அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தபோது அவர் இறந்தது தெரிய வந்தது.

பள்ளத்தில் மின்கசிவு ஏற்பட்டு மின்சாரம் தாக்கி இறந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இதுதொடர்பாக விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Summary

Woman dies after falling into a stormwater drain pit in Chennai Anna Nagar

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.