
கன்னிப் பேச்சு என்ற வார்த்தை வேண்டாம்! பெண் எம்எல்ஏக்கள் கோரிக்கை!
பேரவைத் தலைவரிடம் பெண் எம்எல்ஏக்கள் கோரிக்கை முன்வைத்துள்ளது பற்றி...

சௌமியா அன்புமணி | லதா - TN
எம்எல்ஏக்களின் முதல் உரையை கன்னிப் பேச்சு என்ற வார்த்தை கொண்டு குறிப்பிட வேண்டாம் என்று பேரவையில் பெண் எம்எல்ஏக்கள் கோரிக்கை வைத்தனர்.
நாடாளுமன்றம் அல்லது சட்டப்பேரவையில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் பேசும் முதல் உரையை 'கன்னிப் பேச்சு' என்று கூறுவார்கள்.
தமிழக சட்டப்பேரவையில் இன்றும் 'கன்னிப் பேச்சு' என்ற சொல் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் 'கன்னிப் பேச்சு' என்ற வார்த்தைக்குப் பதிலாக 'அறிமுக உரை' அல்லது 'முதல் உரை' போன்ற வார்த்தையைப் பயன்படுத்தலாம் என்று பேரவைத் தலைவரிடம் பாமக எம்எல்ஏ சௌமியா அன்புமணி கோரிக்கை முன்வைத்தார்.
அதைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏ லதாவும் இதனை முன்மொழிந்தார். அவர் பேசுகையில், "கன்னிப் பேச்சு என்ற வார்த்தை ஆணாதிக்க சிந்தனையை வெளிப்படுத்துவதாக இருப்பதால் அதனை அவைக்குறிப்பில் இருந்தும் நீக்க வேண்டும்" என்றார்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் ராஜ்மோகன்,
"கடந்த சட்டப்பேரவையிலேயே வானதி சீனிவாசன் இதுபற்றி பேசியுள்ளார். கடந்த அவையிலும் இதனை பரிசீலிப்பதாகச் சொன்னார்கள். சௌமியா சொன்னது நல்ல ஆலோசனை.
இதுவொரு மரபாக உள்ளது. எங்கள் வெற்றித் தலைவரின் ஆட்சியில் இதனை பரிசீலனை செய்யுமாறு வழிமொழிகிறேன்" என்றார்.
Summary
We dont want the term maiden speech: Women MLAs demand in TN assembly
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






