
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: நாதக வேட்பாளர்கள் இன்று அறிவிப்பு?
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் நாதக வேட்பாளர்கள் அறிவிப்பு குறித்து...
சீமான். - கோப்புப்படம்
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்களை அந்தக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று(செப். 13) அறிவிக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் திருச்சி கிழக்கு, விராலிமலை, அம்பாசமுத்திரம், கரூர், பெருந்துறை, மதுராந்தரம், தாராபுரம் ஆகிய 7 பேரவைத் தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இதில், தாராபுரம், மதுராந்தகம் ஆகிய தொகுதிகளில் தேர்தல் வழக்கு நிலுவையில் இல்லாத நிலையில், இவ்விரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் அக்.6-ஆம் தேதி நடைபெறும் என்று தோ்தல் ஆணையம் அறிவித்தது.
இரு தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் புதன்கிழமை (செப்.9) தொடங்கியது.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் (தனி) தொகுதியில் திமுக சார்பில் இ. பரந்தாமன், திருப்பூர் மாவட்டம், தாராபுரம் (தனி) தொகுதியில் சுகன்யா ஆகியோர் வேட்பாளா்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
தவெக சார்பில் மாநில துணைப் பொதுச் செயலர் கே. மரகதம் குமரவேல் மதுராந்தகத்திலும், திருப்பூர் தென்கிழக்கு மாவட்டச் செயலர் பி. சத்தியபாமா தாராபுரத்திலும் போட்டியிடுகின்றனர்.
மதுராந்தகம் (தனி) தொகுதியில் அதிமுக தலைமைச் செயற்குழு உறுப்பினரும், மகளிரணி இணைச் செயலருமான முன்னாள் எம்எல்ஏ கணிதா சம்பத், தாராபுரம் (தனி) தொகுதியில் திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட மகளிரணி இணைச் செயலரும், மாவட்ட ஊராட்சிக் குழு 12-ஆவது வாா்டு முன்னாள் உறுப்பினருமான கே. பானுமதி ஆகியோா் போட்டியிடுகின்றனர்.
இந்த நிலையில், மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் குறித்த அறிவிப்பை, இன்று மாலை நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிடுகிறார்
மதுராந்தகத்தில் ஏற்கெனவே போட்டியிட்டவருக்கு மீண்டும் வாய்ப்பு தரவுள்ளதாகவும், தாராபுரத்தில் புதிய நபருக்கு வாய்ப்பு வழங்க திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Summary
Reports indicate that Seeman, the Chief Coordinator of the NTK, is set to announce the party's candidates for the Maduranthakam and Dharapuram by-elections today (September 13).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







