அதிரடியாக 15 நாள்களில் ரூ.15,000 குறைந்த தங்கம்! இன்றைய (நவ.20) தங்கம், வெள்ளி விலை நிலவரம்!
தங்கம் விலை அதிரடியாக வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.3,760 குறைந்து ரூ.92,080-க்கு விற்பனையாவது குறித்து...

தங்கம் விலை அதிரடியாக வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.3,760 குறைந்து ரூ.92,080-க்கு விற்பனையாகிறது. - ENS
சென்னை: தங்கம் விலை அதிரடியாக வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.3,760 குறைந்து ரூ.92,080-க்கு விற்பனையாகிறது. கடந்த 15 நாள்களில் மட்டும் தங்கம் பவுனுக்கு ரூ.15,000 குறைந்துள்ளது.
கடந்த ஆண்டு டிச.15-ஆம் தேதி பவுன் ரூ.1,00,120-க்கு விற்பனையானது. அதன் பின்னா் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வந்தது.
நிகழண்டின் தொடக்கத்தில் ஜன.1-ஆம் தேதி கிராம் ரூ.12,440-க்கும், பவுன் ரூ.99,520-க்கும் விற்பனையானது. ஜன. 20-ஆம் தேதி அதிகபட்சமாக கிராம் ரூ.16,800-க்கும், பவுன் ரூ.1,34, 400-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில், தற்போது தங்கத்தின் விலை தொடா்ந்து குறைந்து வருகிறது. செவ்வாய்க்கிழமை கிராமுக்கு ரூ.70 குறைந்து ரூ.12,470-க்கும், பவுனுக்கு ரூ.560 குறைந்து ரூ.99,760-க்கும், புதன்கிழமை கிராமுக்கு ரூ.255 குறைந்து, ரூ.12,215-க்கும், பவுன் ரூ.2,040 குறைந்து, ரூ.97,720-க்கும், வியாழக்கிழமை கிராமுக்கு ரூ.235 குறைந்து ரூ.11,980-க்கும், பவுனுக்கு ரூ.1,880 குறைந்து ரூ.95,840-க்கும் விற்பனையானது.
அதிரடியாக பவுனுக்கு ரூ.3,760 குறைந்த தங்கம்
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை (நவ. 20) கிராமுக்கு ரூ.470 குறைந்து ரூ.11,510-க்கும், பவுனுக்கு ரூ.3,760 குறைந்து ரூ.92,080-க்கும் விற்பனையாகிறது.
15 நாள்களில் ரூ.15,000 குறைந்த தங்கம்
கடந்த 15 நாள்களில் மட்டும் தங்கம் பவுனுக்கு ரூ.15,000 குறைந்துள்ளது நகைப்பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தொடர் விலை குறைப்பும்... விற்பனை அதிகரிப்பும்...
ஆபரண தங்கத்தின் விலை அதிரடியாகக் குறைந்து வரும் நிலையில், மக்கள் நகைகளாகவும், தங்க நாணயங்களாகவும் தங்களின் தேவைக்கு ஏற்ப வாங்குகின்றனா். தொடர் விலை குறைவால் தங்கத்தின் விற்பனை தொடர்ந்து அதிகரித்துள்ளது.
வெள்ளி விலை:
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.175-க்கும், ஒரு கிலோ (கட்டி) வெள்ளி ரூ.5,000 குறைந்து, ரூ.1.75 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.
Gold price drops by Rs. 15,000 in just 15 days! Today’s (Nov 20) gold and silver price update!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


