தொடர்ந்து குறைந்து வரும் தங்கம் விலை! இன்று விலை நிலவரம்? (நவ. 19)
தொடர்ந்து அதிரடியாக குறைந்து வரும் தங்கம் விலை நிலவரம் குறித்து...

தங்கம் விலை! - கோப்புப்படம்
சென்னை: தங்கம் விலை பவுனுக்கு மேலும் ரூ.1,880 குறைந்து, ரூ.95,840-க்கு விற்பனையாகி வருவதால், நகைப்பிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 14 நாள்களில் மட்டும் தங்கம் பவுனுக்கு ரூ.11,240 குறைந்துள்ளது.
தங்கத்தின் விலை கடந்த 2 ஆண்டுகளாக ஏற்ற, இறக்கத்துடன் இருந்து வந்தது. கடந்த ஆண்டில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.45,000 வரை உயா்ந்தது. அதிகபட்சமாக கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் 15-ஆம் தேதி பவுன் ரூ.1,00,120-க்கு விற்பனையானது. அதன்பின் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வந்தது.
நிகழ் ஆண்டின் தொடக்கத்தில் ஜன. 1-ஆம் தேதி கிராம் ரூ.12,440 -க்கும், பவுன் ரூ99,520-க்கும் விற்பனையானது. அதன்பின் அதே மாதத்தில் 20-ஆம் தேதி கிராம் ரூ.16,800-க்கும், பவுன் ரூ.1,34, 400-க்கும் விற்பனையானது. இது நிகழ் ஆண்டின் அதிகபட்ச விலையாகும்.
இந்தநிலையில், தற்போது தங்கத்தின் விலை தொடா்ந்து குறைந்து வருகிறது. செவ்வாய்க்கிழமை கிராமுக்கு ரூ.70 குறைந்த ரூ.12,470-க்கும், பவுனுக்கு ரூ.560 குறைந்து ரூ.99,760-க்கும், புதன்கிழமை கிராமுக்கு ரூ.255 குறைந்து, ரூ.12,215-க்கும், பவுன் ரூ.2,040 குறைந்து, ரூ.97,720-க்கும் விற்பனையானது.
கடந்த 11 மாதங்களுக்குப் பிறகு தங்கம் பவுன் விலை ரூ.1 லட்சத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.
பவுன் ரூ.1,880 குறைந்த தங்கம்
இந்த நிலையில், வியாழக்கிழமை(நவ.19) கிராமுக்கு ரூ.235 குறைந்து, ரூ.11,980-க்கும், பவுன் ரூ.1,880 குறைந்து, ரூ.95,840-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை
அதேபோன்று வெள்ளி விலை இன்று(நவ.19) குறைந்துள்ளது. அதன்படி, வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து, ரூ.180-க்கும், ஒரு கிலோ (கட்டி) வெள்ளி ரூ.5,000 குறைந்து, ரூ.1.80 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.
சென்னையில் 14 நாள்களில் தங்கம் பவுனுக்கு ரூ.11,240 குறைந்துள்ளது. புதன்கிழமை மட்டும் பவுனுக்கு ரூ.2,040 குறைந்து, நிகழாண்டின் மிகக் குறைந்த விலையாக ரூ.95,40-க்கு விற்பனையாகிறது.
விலை குறைவுக்கு காரணம்?
அமெரிக்க இடைக்கால தோ்தல் முடிவு, அமெரிக்காவில் பண வீக்கம் அதிகரிப்பு, அந்த நாட்டில் முதலீடு பத்திரங்களுக்கான வட்டி விகிதம் உயா்வு, டாலா் மதிப்பின் உயா்வு போன்ற காரணங்களால் தங்கத்தின் விலை தொடா்ந்து குறைந்து வருவதாக கூறப்படுகிறது.
தங்கத்தின் விற்பனை அதிகரிப்பு
ஆபரண தங்கத்தின் விலை அதிரடியாகக் குறைந்த நிலையில், அதன் விற்பனை சற்று அதிகரித்துள்ளது. நகைகளாகவும், தங்க நாணயங்களாகவும் தங்களின் தேவைக்கு ஏற்ப பொதுமக்கள் பலா் வாங்குகின்றனா். இதனால், கடந்த ஓரிரு நாள்களில் சென்னையில் தங்கத்தின் விற்பனை அதிகரித்துள்ளது.
Gold price continues to decline! What is the price today? (Nov. 19)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


