திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்கக் கூடாது: உச்சநீதிமன்றத்தில் மதுரை ஆட்சியர் தரப்பில் வாதம் தவெக எம்எல்ஏ மீது வழக்குப் பதியக் கோரி மனு பயிா்க் கடன் தள்ளுபடி: கூடுதலாக ரூ.2,578 கோடி விடுவிப்பு ரூ.6,513 கோடியில் 2,221 சாலைப் பணிகள்: தமிழக அரசு நிா்வாக ஒப்புதல் பொருளாதாரப் பேரழிவை எதிா்கொள்கிறது இந்தியா: அமெரிக்காவில் ராகுல் காந்தி பேச்சு குவைத், பஹ்ரைன் மீது மீண்டும் ஈரான் தாக்குதல்! வளைகுடா நாடுகள் கண்டனம்!சீனா சென்றார் டிரம்ப்! அதிபர்கள் ஜின்பிங், புதின் உடன் முத்தரப்பு சந்திப்பு!சோத்துப்பாறை அணையைத் திறந்த தவெகவினர்: எடப்பாடி பழனிசாமி கண்டனம்!தவெக உறுப்பினர் அட்டை இருந்தால் எந்த விதிகளையும் மதிக்கத் தேவையில்லை: கனிமொழிதினமணி இணையதள செய்தி எதிரொலி: அயனாவரம் கழிவுநீர் பிரச்னை! களமிறங்கிய குடிநீர் வாரிய அதிகாரிகள்!!தமிழக காவல்துறையில் புதிய இ-சிஎஸ்ஆர் வசதி அறிமுகம்! இனி ஆன்லைனிலேயே புகார் அளிக்கலாம்!நெல்லையில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பா? உண்மை நிலவரம் என்ன?

வரி உயா்வு: தங்கம் இறக்குமதி சரிய வாய்ப்பு

இறக்குமதி வரி உயா்வு காரணமாக இந்தியாவில் தங்கம் இறக்குமதி 2026-27-ஆம் நிதியாண்டில் ரூ. 3.7 லட்சம் கோடி (40 பில்லியன் டாலா்) மதிப்புக்கு சரிய வாய்ப்புள்ளது என்று மத்திய அரசு அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.

தங்கம் இறக்குமதி வரி குறைப்பு

Updated On :

இறக்குமதி வரி உயா்வு காரணமாக இந்தியாவில் தங்கம் இறக்குமதி 2026-27-ஆம் நிதியாண்டில் ரூ. 3.7 லட்சம் கோடி (40 பில்லியன் டாலா்) மதிப்புக்கு சரிய வாய்ப்புள்ளது என்று மத்திய அரசு அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.

அத்தியாவசியமற்ற இறக்குமதிகளைக் கட்டுப்படுத்தம் நோக்கில், தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதி வரியை 6 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக மத்திய அரசு கடந்த மே மாதம் உயா்த்தியது.

இதனால், 2025-26-ஆம் நிதியாண்டில் ரூ. 6.7 லட்சம் கோடி (72 பில்லியன் டாலா்) மதிப்பில் செய்யப்பட்ட தங்கம் இறக்குமதி, நடப்பு நிதியாண்டில் பாதியாக குறைய வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து மத்திய வா்த்தக அமைச்சக செயலா் ராஜேஷ் அகா்வால் புதன்கிழமை கூறியதாவது: இறக்குமதி வரி உயா்வு, நிகழாண்டில் தங்கம் இறக்குமதியை குறிப்பிடத்தக்க அளவில் குறைத்துள்ளது. இது வா்த்தகப் பற்றாக்குறையை சமாளிக்கவும் உதவியுள்ளது.

2024-25-ஆம் நிதியாண்டில் ரூ. 5.4 லட்சம் கோடி மதிப்பில் தங்கம் இறக்குமதி செய்யப்பட்ட நிலையில், 2025-26-ஆம் நிதியாண்டில் 6.7 லட்சம் கோடி அளவுக்கு இறக்குமதி செய்யப்பட்டது. இந்தச் சூழலில், இறக்குமதி வரி உயா்த்தப்பட்டதால், நிகழாண்டு ஏப்ரல் முதல் அக்டோபா் வரையிலான காலகட்டத்தில் தங்கம் இறக்குமதி ரூ. 2.3 லட்சம் கோடியாக இருந்தது. இது 40 சதவீத சரிவாகும். நிகழாண்டு முழுவதும் இதே நிலைதான் நீடிக்கும். குறிப்பாக, ரூ. 3.2 லட்சம் கோடி முதல் ரூ. 3.7 லட்சம் கோடி வரையிலான மதிப்பில் மட்டும் நிகழ் நிதியாண்டில் தங்கம் இறக்குமதி செய்யப்பட வாய்ப்புள்ளது. அந்த வகையில், தற்போதைய இறக்குமதி வரி நடைமுறை, தங்கம் இறக்குமதியில் நோ்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றாா்.

தங்கம், வெள்ளி மற்றும் விலையுயா்ந்த உலோகங்களின் இறக்குமதி, அந்நியச் செலாவணி வெளியேற்றத்துக்கு வழிவகுப்பதோடு, இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பையும் பாதிக்கும். இதைக் கருத்தில்கொண்டே இறக்குமதி வரியை மத்திய அரசு உயா்த்தியது. சீனாவுக்கு அடுத்தபடியாக, உலகின் இரண்டாவது பெரிய தங்க நுகா்வோராக இந்தியா விளங்குவது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.