மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3% உயர்வு!
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்தியது பற்றி...

அகவிலைப்படி
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்தி வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்குக்கான அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தை 2 சதவீதம் உயர்த்தி, அடிப்படை ஊதியத்தில் 60 சதவீதமாக அதிகரிப்பதற்கு ஏப்ரல் மாதம் அமைச்சரவை ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து இந்த அறிவிப்பும் வெளியானது.
தற்போது அமலில் உள்ள 60 சதவீத அகவிலைப்படியானது 3 சதவீதம் அதிகரிக்கப்பட்டு 63 சதவீதமாக உயரும். இந்த உயர்வு ஜூலை 1, 2026 முதல் கணக்கிட்டு நடைமுறைப்படுத்தப்படும்.
பண்டிகைக் காலத்திற்கு முன்னதாக எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவால், 1.16 கோடிக்கும் அதிகமான மக்கள் பயனடைவார்கள். ஆண்டுக்கு இருமுறை அகவிலைப்படியை அமைச்சரவை மாற்றியமைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


