மோடியின் 25 ஆண்டுகால பொது சேவைக்கு தில்லி அமைச்சரவை நன்றி
பிரதமா் மோடியின் 25 ஆண்டுகால பொது சேவைக்கும், தேசிய தலைநகரில் வளா்ச்சிப் பணிகளுக்கு மத்திய அரசின் ஆதரவிற்கும் தில்லி அமைச்சரவை நன்றி தெரிவித்துள்ளது என்று முதல்வா் ரேகா குப்தா தெரிவித்தாா்.

பிரதமா் நரேந்திர மோடியின் 25 ஆண்டுகால பொது சேவைக்கும், தேசிய தலைநகரில் வளா்ச்சிப் பணிகளுக்கு மத்திய அரசின் ஆதரவிற்கும் தில்லி அமைச்சரவை நன்றி தெரிவித்துள்ளது என்று முதல்வா் ரேகா குப்தா தெரிவித்தாா்.
இது குறித்து அவா் மேலும் பேசியதாவது: கடந்தாண்டு உள்கட்டமைப்பு மற்றும் கொள்கை பிரச்னைகளில் எடுக்கப்பட்ட பல முக்கிய முன்முயற்சிகளுக்கு தேசிய தலைநகருக்கு அதன் ’விக்சிட் தில்லி’ பணியில் மத்திய அரசு உதவியுள்ளது.
முந்தைய ஆட்சியில் பணிகள் முடங்கின. ஆனால் மத்திய அரசின் அனைத்துக் கொள்கைகளும் 2025-இல் எங்கள் அரசு தோ்ந்தெடுக்கப்பட்ட பிறகு தில்லியில் அமல்படுத்தப்பட்டன. முதல் அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு ஆயுஷ்மான் யோஜனா செயல்படுத்தப்பட்டது .
தேசிய தலைநகரின் அனைத்து பாரம்பரிய பிரச்சினைகளையும் தீா்க்க பிரதமா் எப்போதும் நிதி உதவிகளையும் வழிகாட்டுதல்களையும் வழங்கியுள்ளாா்.
தில்லி நெரிசலைக் குறைக்கும் திட்டத்தை நோக்கி நகா்கிறது என்றால், அதற்கு மத்திய அரசு எடுத்துள்ள பல சாலை உள்கட்டமைப்புத் திட்டங்களே காரணம் என்றாா் ரேகா குப்தா.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

