வெற்றி வானில் உலாவரச் செய்வோம்: குழந்தைகள் நாளில் முதல்வர் விஜய் வாழ்த்து!தமிழக அரசின் வங்கிக் கணக்கில் ரூ.22 கோடி மோசடி: 7 பேர் கைது! திரைப்பட பாணியில் ஒரு சம்பவம்விரைவு ரயில்களின் இருக்கை நீல நிறத்தில் இருக்க இத்தனை காரணங்களா?அமெரிக்கா முழுவதும் விமான சேவைகள் பாதிப்பு! பயணிகள் அவதிதிருச்செந்தூரில் நாளை (நவ. 15) சூரசம்ஹாரம்ஆயுஷ் படிப்புகள்: நாளை சிறப்புக் கலந்தாய்வுசபரிமலை பக்தா்களுக்கு தமிழகம் வழியாக சிறப்பு ரயில்கள்இந்தியாவின் சரக்கு ஏற்றுமதி அக்டோபரில் 45% அதிகரிப்பு: 5 ஆண்டுகளில் இல்லாத வளா்ச்சிவங்கக் கடலில் நவ.16-இல் உருவாகிறது ‘அக்வான்’ புயல்: ஆந்திரத்தை நோக்கி நகரும்?

தொடர்ந்து குறைந்து வரும் தங்கம் விலை! இன்று எவ்வளவு? (நவ. 14)

தொடர்ந்து குறைந்து வரும் தங்கம் விலை நிலவரம் குறித்து...

Gold price

தொடர்ந்து குறைந்து வரும் தங்கம் விலை - படம்: பிடிஐ

Updated On :

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த 5 நாள்களில் பவுன் ரூ.5,120 குறைந்துள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று பவுனுக்கு ரூ. 640 குறைந்து விற்பனையாகிறது.

சென்னையில் தங்கம் விலை கடந்த சில நாள்களாக தொடா்ந்து குறைந்து வருகிறது. தங்கத்தின் விலை கடந்த நவ. 11-ஆம் தேதி பவுன் ரூ.1,560 குறைந்து ரூ.1,04,120-க்கும், நவ.12-இல் பவுன் ரூ.1,600 குறைந்து ரூ.1,02,520-க்கும் விற்பனையானது. நவ.13 ஆம் தேதி ரூ. 960 குறைந்து ரூ. 1,01,560-க்கு விற்பனையான நிலையில், தொடா்ந்து 5-ஆவது நாளாக மேலும் குறைந்து சனிக்கிழமை ரூ. 640 குறைந்து ரூ. 1,00,920-க்கு விற்பனையாகிறது.

தங்கம் விலை

அதன்படி, சனிக்கிழமை(நவ.14) கிராமுக்கு ரூ.80 குறைந்து ரூ.12,615-க்கும், பவுனுக்கு ரூ.640 குறைந்து ரூ.1,00,920-க்கும் விற்பனையாகிறது.

இதன்மூலம் தங்கத்தின் விலை கடந்த ஐந்து நாள்களில் பவுனுக்கு ரூ.5,120 குறைந்துள்ளது.

வெள்ளி விலை

வெள்ளி விலையில் இன்று மாற்றமின்றி கிராம் ரூ.195-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.1.95 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.

இந்த நவம்பர் மாதத்தில் அதிகபட்சமாக தங்கம் விலை கடந்த நவ. 5 ஆம் தேதி ஒரு பவுன் ரூ. 1,16,816 -க்கு விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை குறைந்து வருவதே இந்த தொடர் விலை சரிவுக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.

Gold price continues to decline! What is the price today?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER