உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றப்பட்டதா? விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கு ஆளுநர் கடிதம்?
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றப்பட்டதா? என்பது தொடர்பாகத் தமிழக அரசுக்கு ஆளுநர் அர்லேகர் கடிதம் எழுதியுள்ளதாகக் கூறப்படுவது பற்றி...

தலைமைச் செயலகம் / ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் - கோப்புப் படங்கள்
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றப்பட்டதா? என்று தமிழ்நாடு அரசிடம் ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் விளக்கம் கேட்டுள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுதொடர்பாக, அரசு தலைமைச் செயலருக்கு ஆளுநர் அர்லேகரால் கடிதம் எழுதப்பட்டுள்ளதாக இவ்வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
திருப்பரங்குன்றத்தில் வழக்கமாக உச்சிப் பிள்ளையார் கோவில் மண்டபத்தில்தான் கார்த்திகை தீபம் ஏற்றப்படும். எனினும், இதுதொடர்பான வழக்கின் தொடர்ச்சியாக, இந்த ஆண்டு மட்டும் மலையிலுள்ள சர்ச்சைக்குரிய கல் தூணில் தீபமேற்றுமாறு உச்சி நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
எனினும், நேற்று, செவ்வாய்க்கிழமை கார்த்திகை தீபத் திருநாளில் மலையில் வழக்கமான இடத்திலேயே, உச்சிப் பிள்ளையார் கோவில் மண்டபத்தில், தீபமேற்றப்பட்டது குறிப்பிடத் தக்கது.
Summary
Was a deepam lit on the Tirupparankundram hill in accordance with Supreme Court order? Has Governor sent a letter to the Tamil Nadu government seeking an explanation
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

