திருப்பரங்குன்றம் தூண் தீப விவகாரத்தில் எந்தக் கருத்தும் கூறவில்லை - ஸ்தானீக பட்டர்கள்!
திருப்பரங்குன்றம் தூணில் தீப ஏற்றும் விவகாரத்தில் எந்தக் கருத்தும் கூறவில்லை என கோயில் ஸ்தானீக பட்டர்கள் விளக்கம்

திருப்பரங்குன்றம்
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் முருகன் கோயில் அமைந்துள்ள மலையின் மீது தூணில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் நாங்கள் எந்தக் கருத்தும் கூறவில்லை என்று கோயில் ஸ்தானீக பட்டர்கள் தெரிவித்துள்ளனர்.
உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூண் பகுதியில் நேற்று தீபம் ஏற்றப்படவில்லை. எனினும், வழக்கமாக உச்சிப்பிள்ளையார் கோயில் மகா தீப மண்டபத்தில் மட்டும் தீபம் ஏற்றப்பட்டது.
நேற்று மாலையில், திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவை பின்பற்றாதது ஏன்? என்பது குறித்து சுப்பிரமணிய சுவாமி கோயில் நிர்வாகம் விளக்கம் அளித்திருந்தது. அதில், கோயில் ஸ்தானிகர்களின் கருத்துகளின் அடிப்படையில் வழக்கமாக தீபம் ஏற்றப்படும் இடத்திலேயே இந்த ஆண்டும் தீபம் ஏற்றப்பட்டது என்று கூறப்பட்டிருந்தது.
இந்த நிலையில்தான், திருப்பரங்குன்றம் கோயில் ஸ்தானீக பட்டர்கள் இன்று ஒரு கடிதம் எழுதியிருக்கிறார்கள்.
அந்தக் கடிதத்தில், இத்திருக்கோயில் ஸ்தானீக பாட்டர்கள் எழுதிக் கொண்டது, திருக்கார்த்திகை தீபத்தன்று ஒரு கடிதத்தை திருக்கோயில் அறங்காவலர் குழு வெளியிட்டது. நாங்கள் இத்திருக்கோயில், இன்று நடந்த கார்த்திகை தீபம் ஏற்றுவது சம்பந்தமாக எந்த ஒரு கடிதமும் திருக்கோவிலுக்கு வழங்கவில்லை. மற்றும் உச்சிப்பிள்ளையார் கோயிலில் தீபம் ஏற்றுவது சம்பந்தமாக கடந்த ஆண்டு தபால் அளித்துள்ளோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, மலைமேல் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்றுவது சம்பந்தமாக நாங்கள் எந்த ஒரு கருத்தும் கூறவில்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
கோயில் நிர்வாகம் வெளியிட்ட கடிதத்தில் எங்களை கலக்காமல் எங்களது பெயர்களையும் சேர்த்து வெளியிட்டது எங்களுக்கு மிகவும் மனவேதனையை தருகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் என்று கடிதம் கோயில் நிர்வாகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதில், கோயில் ஸ்தானீக பட்டர்கள் நான்கு பேர் கையெழுத்திட்டிருக்கிறார்கள்.
நேற்று மாலை கோயில் நிர்வாகம் வெளியிட்ட விளக்கத்தில், திருக்கோயிலில் காலங்காலமாக கடைப்பிடிக்கப்படும் வழக்கத்தின்படி, மூலவரின் சிரசுக்கு நேர்மேல் உள்ள இவ்விடமான மலை மேல் உள்ள உச்சிப்பிள்ளையார் கோயில் அருகிலுள்ள தீப மண்டபத்தில் கார்த்திகை மகாதீபம் ஏற்றப்பட்டு வருகின்றது.
நமது திருக்கோயிலில் காலங்காலமாக பின்பற்றப்பட்டு வரும் மரபுகள், பாரம்பரிய பழக்க வழக்கங்கள் ஆகம விதிமுறைகள் மற்றும் நிலை பெற்ற வழிபாட்டு நடைமுறைகள் பாதுகாக்கப்பட வேண்டியவை என்றும், அவற்றின் வரலாற்றுத் தொடர்ச்சி மற்றும் சமய முக்கியத்துவம் கொண்ட ஆவணங்கள், ஆகமச்சான்றுகள் மற்றும் ஸ்தானிகர்களின் கருத்துகளின் அடிப்படையில் வழக்கமாக தீபம் ஏற்றப்படும் இடத்திலேயே இந்த ஆண்டும் தீபம் ஏற்றுவதற்கும், அதைத்தொடர்ந்து திருக்கோயில் மரபு மற்றும் பழக்க வழக்கங்களை நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படவேண்டும் என்றும், இந்திருக்கோயில் அறங்காவலர் குழு ஏகமனதாக தீர்மானித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Summary
Sthanika Bhattars (temple priests) have offered no comment regarding the issue concerning the 'Thoon Deepam' (pillar lamp) at Tirupparankundram.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

