திருப்பரங்குன்றத்தில் மகாதீபம் ஏற்றப்பட்டது! சிடிஆர் நிர்மல்குமார் பதிவு

திருப்பரங்குன்றத்தில் மகாதீபம் ஏற்றப்பட்டது என்று சிடிஆர் நிர்மல்குமார் பதிவிட்டுள்ளார்.

திருப்பரங்குன்றத்தில் மகாதீபம்

திருப்பரங்குன்றத்தில் மகாதீபம் - from video grab

Updated On :

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள உச்சிப்பிள்ளையார் கோயிலில் வழக்கமான இடத்தில் மகா தீபம் ஏற்றப்பட்டது குறித்து அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் பதிவிட்டுள்ளார்.

உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தூண் பகுதியில் தீபம் ஏற்றப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்திருந்தது. ஆனால், திருப்பரங்குன்றம் மலை மீது வழக்கமாக மகா தீபம் ஏற்றும் இடத்தில் தீபம் ஏற்றப்பட்டதே தவிர தூண் பகுதியில் தீபம் ஏற்றப்படவில்லை.

இந்த நிலையில், திருப்பரங்குன்றம் கோயில் வாசலில், ஏராளமான ஹிந்து அமைப்பினர், அரசுக்கு எதிராகவும், காவல்துறைக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பி, தரையில் அமர்ந்து போராட்டங்களை நடத்தினர.

இதற்கிடையே, திருப்பரங்குன்றத்தில் மூலவரின் சிரசுக்கு நேர் மேல் உள்ள உச்சிப்பிள்ளையார் கோயில் அருகிலுள்ள தீப மண்டபத்தில் கார்த்திகை மகாதீபம் ஏற்றப்பட்டுள்ளது என்று அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் பதிவு கவனம் பெற்றுள்ளது.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அந்த தூணில் கோயில் நிர்வாகம் சார்பில் தீபம் ஏற்றப்படவில்லை. வழக்கமான உச்சிப்பிள்ளையார் கோயிலில் அரோகரா கோஷத்துடன் மகாதீபம் ஏற்றப்பட்டது.

தூண் பகுதியில் தீபம் ஏற்றுவதற்கான எந்த நடவடிக்கையும் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்படாத நிலையில், கோயில் வாசலில் காவல்துறை குவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தூண் பகுதியில் தீபம் ஏற்றப்படாததால், கோயில் வாசல் அருகே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Summary

Mahadeepam lit at Tirupparankundram! Post by CTR Nirmal Kumar

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.