லத்தியால் அடித்து கலைப்போம்: திருப்பரங்குன்றத்தில் போராட்டம் நடத்துவோருக்கு போலீஸ் எச்சரிக்கை!
திருப்பரங்குன்றத்தில் போராட்டம் நடத்தும் ஹிந்து அமைப்பினரை கலைந்து செல்லுமாறு பேனர் வைத்து போலீஸார் எச்சரித்துள்ளனர்.

திருப்பரங்குன்றத்தில் போராட்டம் நடத்துவோருக்கு போலீஸ் எச்சரிக்கை
திருப்பரங்குன்றத்தில் போராட்டம் நடத்தும் ஹிந்து அமைப்பினரை கலைந்து செல்லுமாறு பேனர் வைத்து போலீஸார் எச்சரித்துள்ளனர்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அங்கு தீபம் ஏற்றப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இதனைத் தொடர்ந்து, பாஜக மற்றும் ஹிந்து அமைப்புகளைச் சேர்ந்த பலரும் மலை அடிவாரத்தில் கூடினர்.
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள உச்சிப் பிள்ளையார் கோயில் பகுதியில் வழக்கமான நடைமுறைகள்படி மகாதீபம் ஏற்றப்பட்டுள்ளது.
நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் அங்கு குவிக்கப்பட்டுள்ள நிலையில், மலை மேலுள்ள தூணில் தற்போது வரை தீபம் ஏற்றப்படவில்லை.
தீபம் ஏற்றப்படாததால் அங்கு கூடியிருந்த ஹிந்து அமைப்பினர் அரசுக்கு எதிராகவும் காவல்துறையினருக்கு எதிராகவும் கோஷம் எழுப்பி வருகின்றனர். கூட்டம் அலைமோதுவதால் அவர்களுக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
தற்போது, தரையில் அமர்ந்து அவர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், காவல்துறையினர் வலுக்கட்டாயமாக வெளியேற்றி வருகிறார்கள்.
இந்த நிலையில், காவல்துறையினர் அங்கு கூடியிருக்கும் கூட்டத்தை வெளியேறுமாறு கோரிக்கை வைத்துள்ளனர். அவ்வாறு வெளியேறாவிட்டால் அவர்களை லத்தியால் அடித்துக் கலைப்போம் என்றும் பேனர் வைத்து எச்சரித்துள்ளனர்.
காவல்துறையினரின் எச்சரிக்கை பேனரில், “நீங்கள் கூடியிருப்பது சட்ட விரோதமான கூட்டம். உடனே கலைந்து போங்கள். இல்லாவிட்டால், லத்தியால் அடித்துக் கலைக்க நேரிடும்” என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.
Summary
In Tirupparankundram, the police have put up a banner warning the members of Hindu organizations who are staging a protest to disperse.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


