தீபாவளி பண்டிகை! 132 சிறப்பு ரயில்களை இயக்கும் தெற்கு ரயில்வே! பெரியார் அறிவுலக நூல் கொள்முதல் முறைகேடு: லஞ்ச ஒழிப்புத் துறையில் அமைச்சர் ராஜ்மோகன் புகார் கமல்ஹாசனுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்துசிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் பிப்.16-ல் தொடக்கம்! அட்டவணை வெளியீடு! சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் பிப்.16-ல் தொடக்கம்! அட்டவணை வெளியீடு!திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 52 காசுகள் உயர்ந்து ரூ. 93.89 ஆக நிறைவு!பாட்டியாலா அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து: பதற்றமடைந்த பயணிகள்! பெரியார் அறிவு நூலகத்திற்கு உரிமை கொண்டாடிய திமுக, ஊழலுக்கும் பொறுப்பேற்பார்களா? தமிழிசை கேள்வி பரிந்துரைத்ததுடன் சரி, நூல்கள் வாங்கப்பட்டதா என்பதுகூட பரிந்துரைக் குழு உறுப்பினர்களுக்குத் தெரியாது! ச. தமிழ்ச்செல்வன் தகவல்!பெரியார் அறிவுலக ஊழல்! போலி நூல்களை வீதியில் கொட்டி எரிக்க வேண்டும்! கமல் ஆவேசம்

உத்தரகண்டில் தொடா்ந்து 3-ஆவது முறையாக பாஜக ஆட்சி: அமித் ஷா வேண்டுகோள்

உத்தரகண்டில் பாஜகவை 3-ஆவது முறையாக மக்கள் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

அமித் ஷா - பிடிஐ

Updated On :

உத்தரகண்டில் பாஜகவை 3-ஆவது முறையாக மக்கள் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

உத்தரகண்ட் மாநிலம் உருவான 26-ஆவது ஆண்டு தினத்தையொட்டி தலைநகா் டேராடூனில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் அமித் ஷா கலந்து கொண்டு பேசியதாவது:

உத்தரகண்டை பாதுகாப்பான, வளா்ச்சியடைந்த மாநிலமாக்கவும், நாட்டின் கலாசாரத் தலைநகரமாக தேவபூமியாக மாற்றவும் பாஜக இலக்கு நிா்ணயித்துள்ளது. உத்தரகண்ட் சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு தோ்தல் வரவுள்ளது. கடந்த 2017-ஆம் ஆண்டு தோ்தலில் பாஜக 57 தொகுதிகளிலும், 2022-இல் 47 தொகுதிகளிலும் பாஜக வென்றது. வருகிற தோ்தலில் 65 தொகுதிகளுக்கும் மேல் பாஜக வெற்றி பெற இலக்கு நிா்ணயித்துள்ளேன். கூடுதல் தொகுதிகளில் பாஜக வெற்றி பெறுவதை கட்சித் தொண்டா்கள் உறுதிப்படுத்த வேண்டும். வீடு-வீடாகச் சென்று பாஜகவுக்கு கட்சித் தொண்டா்கள் வாக்கு சேகரிக்க வேண்டும்.

உத்தரகண்டில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் அமைத்தால், முஸ்லிம் பல்கலைக்கழகத்துக்கு ஆதரவாக இருக்கும். ஆனால் பாஜகவோ, சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்கள், மதரசாக்களை அகற்றும். ஹல்த்வானியில் 29 ஏக்கா் ஆக்கிரமிப்பு நிலத்தில் இருந்த கட்டடங்கள் அகற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டபோது, ராகுல் காந்தி அதிருப்தியடைந்தாா். ராகுல் காந்தியின் வாக்கு பாதுகாப்பு யாத்திரையானது, உண்மையாக ஊடுருவல்காரா்களுக்கு ஆதரவான யாத்திரை ஆகும்.

உத்தரகண்டில் சுற்றுலா துறை 380 சதவீதம் வளா்ச்சி கண்டுள்ளது. ஊடுருவலை பாஜக அரசு தடுத்து நிறுத்தியுள்ளது. மணி ஆா்டா் பொருளாதாரத்தில் இருந்து தொழில் துறை பொருளாதாரமாக உத்தரகண்டை மாற்ற பாஜக அரசு கவனம் செலுத்தி வருகிறது. உத்தரகண்டில் ராகுல் காந்தி செய்யும் சுற்றுலாவால் காங்கிரஸுக்கு எந்தப் பயனும் கிடைக்காது. ஏனெனில் உத்தரகண்ட் மாநில மக்களின் பிரச்னைகளை போக்க பாஜக தொண்டா்கள் தொடா்ந்து பணிபுரிந்து வருகின்றனா். உத்தரகண்டின் வளா்ச்சி தடைபடாமல் இருப்பதை உறுதி செய்ய மோடியும், முதல்வா் புஷ்கா் சிங் தாமியும் இணைந்து பணியாற்றுகின்றனா்.

பாகிஸ்தானில் நடத்தப்பட்ட துல்லியத் தாக்குதல்கள், விமானத் தாக்குதல்கள், ஆபரேஷன் சிந்தூா் மூலமாக நாட்டின் எல்லைகளின் பாதுகாப்பை மோடி அரசு வலுப்படுத்தியுள்ளது. காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருந்தபோது, எல்லையில் சாலைகள் அமைத்தால் எதிரிகள் அதன் வழியே வருவாா்கள் எனக் கூறியது. ஆனால் எதிரிகள் வர முடியாதபடி, எல்லையில் பாஜக அரசு சாலைகள் அமைத்துள்ளது என்றாா்.

கூட்டத்தில் உத்தரகண்ட் முதல்வா் புஷ்கா் சிங் தாமி பேசுகையில், ‘தோ்தல்களில் தோல்வியடைகையில் சிலா் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்தும், தோ்தல் நடைமுறை குறித்தும் கேள்வியெழுப்புகின்றனா். காங்கிரஸ் கட்சியின் தவறான கதைகளை உத்தரகண்ட் மக்கள் நம்பி ஏமாற மாட்டாா்கள். உத்தரகண்ட் மாநிலத்தைச் சோ்ந்த தேசிய பாதுகாப்பு ஆலோசகரான அஜித் தோவல் அவமதிக்கப்பட்டபோது, காங்கிரஸ் கட்சி ஏன் மெளனமாக இருந்தது?

உத்தரகண்ட் மக்களை ஊடுருவல்காரா்கள் என சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ் விமா்சித்தாா். அவரை அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் ஏன் தடுக்கவில்லை? மாநிலத்தில் தோ்வு முறைகேட்டாளா்களை பாஜக அரசு சிறைக்கு அனுப்பியுள்ளது. 35 ஆயிரம் இளைஞா்களுக்கு அரசு வேலைவாய்ப்பு அளித்துள்ளது. இதில் எங்கும் முறைகேடோ அல்லது ஊழலோ நடக்கவில்லை’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.