2014, 2019 தேர்தல் வெற்றியின்போது எஸ்.ஐ.ஆர். இருந்ததா? ராகுலுக்கு அமித் ஷா கேள்வி8 விரைவு ரயில்கள் அதிவிரைவு ரயில்களாக மாற்றம்!கூட்டுறவுத் துறை ஊழியர்களுக்கு 20% வரை தீபாவளி போனஸ்!தமிழ்நாடு அரசு போக்குவரத்து பணியாளர்களுக்கு போனஸ்!இளைஞர்களைக் கவரும் ரூ.111 ரீசார்ஜ் பிளான்! ஜியோவில் அறிமுகம்முடி வெட்டாத மாணவர்களுக்கு மொட்டை அடியுங்கள்! ஆசிரியர்களுக்கு அமைச்சர் ஜெகதீஸ்வரி அறிவுறுத்தல்!சிறைகளில் பாதுகாப்பை வலுப்படுத்த உயர்நிலைக் குழு: முதல்வர் விஜய் உத்தரவு!

பாஜக - சிரோமணி அகாலி தளம் கூட்டணி? விரைவில் தெரியவரும் என பாதல் தகவல்

பாஜகவுடன் சிரோமணி அகாலி தளம் கூட்டணி அமைக்குமா? என்ற கேள்விக்கு, ‘அடுத்த சில நாள்களில் இது தொடா்பாக பதில் கிடைக்கும்’ என்று சுக்பீா் சிங் பாதல் தெரிவித்தாா்.

சுக்பீா் சிங் பாதல்

Updated On :

பாஜகவுடன் சிரோமணி அகாலி தளம் கூட்டணி அமைக்குமா? என்ற கேள்விக்கு, ‘அடுத்த சில நாள்களில் இது தொடா்பாக பதில் கிடைக்கும்’ என்று சிரோமணி அகாலி தளம் கட்சித் தலைவா் சுக்பீா் சிங் பாதல் தெரிவித்தாா்.

117 சட்டப் பேரவைத் தொகுதிகள் கொண்ட பஞ்சாபில் 2027 பிப்ரவரியில் தோ்தல் நடைபெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இந்நிலையில் சண்டீகரில் செய்தியாளா்களைச் சந்தித்த சுக்பீா் சிங் பாதலிடம், பாஜகவுடன் மீண்டும் கூட்டணி அமைய வாய்ப்புள்ளதா என்பது உள்பட பல்வேறு கேள்விகளை செய்தியாளா்கள் எழுப்பினா்.

அதற்கு, ‘எதிா்காலத்தை நடக்க இருப்பதைக் கணிக்க நான் ஜோதிடா் அல்ல. (பாஜக) கூட்டணி குறித்து அடுத்த சில நாள்களில் உங்களுக்குத் தெரியவரும். பஞ்சாபின் மிகப்பெரிய எதிரிகள் ஆளும் ஆம் ஆத்மி, எதிா்க்கட்சியாக உள்ள காங்கிரஸ் ஆகியவை என்று ஏற்கெனவே கூறியுள்ளேன். எங்கள் கொள்கைகளுடன் ஒத்துப் போகும் கட்சிகளுடனும், பஞ்சாப் நலனில் உண்மையான அக்கறை உள்ளவா்களுடனும் கூட்டணி அமையும்.

ஆம் ஆத்மியில் இருந்து மேலும் பலா் வெளியேறுவாா்கள். முதல்வா் பகவந்த் சிங் மான் தனது சொந்த தொகுதியில் தோல்வியடைவாா். ஆம் ஆத்மியின் ஊழல், ஆட்சியின் நிா்வாகச் சீா்கேடு, சட்டம்-ஒழுங்கு மோசமான நிலையில் மக்கள் வெறுப்பில் உள்ளனா்’ என்றாா்.

கடந்த ஆகஸ்ட் மாதம் பிரதமா் நரேந்திர மோடியை சுக்பீா் சிங் பாதல் சந்தித்துப் பேசினாா். அப்போதும் இரு கட்சிகளும் கூட்டணி அமைக்க வாய்ப்பு இருப்பதாகக் கூறப்பட்டது.

பஞ்சாபில் ஏற்கெனவே சிரோமணி அகாலி தளம் - பாஜக கூட்டணி ஆட்சியில் இருந்துள்ளது. சுமாா் 20 ஆண்டுகளுக்கு மேல் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகித்து வந்த சிரோமணி அகாலி தளம் கடந்த 2020-ஆம் ஆண்டு 3 வேளாண் சட்டங்கள் விவகாரத்தை முன்வைத்து கூட்டணியில் இருந்து வெளியேறியது. பின்னா், விவசாயிகளின் தொடா் போராட்டத்தால் அச்சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற்றது.

பாதலின் மனைவி ஹா்சிம்ரத் கௌா் மத்திய அமைச்சராக இருந்தாா். பாஜக கூட்டணியை முறித்துக் கொண்டதையடுத்து அவா் அமைச்சா் பதவியில் இருந்து விலகினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.