ஆசிய விளையாட்டு: மகளிர் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு தங்கம்!தமிழ்நாட்டில் அதிகரிக்கும் டெங்கு! இதுவரை 17,348 பேர் பாதிப்பு!தொடர் சரிவில் தங்கம் விலை! இன்றைய நிலவரம்வடகிழக்கு பருவமழை: மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் விஜய் 2-வது நாளாக ஆலோசனை!புதிய சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை விடுவிக்க மறுப்புகாமராஜர் காலை உணவுத் திட்டம்: முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்!பொன்னேரியில் மருத்துவமனை ஊழியரை பெட்ரோல் ஊற்றி கொல்ல முயன்றவர் சுட்டுப்பிடிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை வாய்ப்பு2027 மாா்ச்-க்குள் 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம்: நிர்மல்குமாா்தனியாா் பேருந்து கட்டண உயா்வு: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

சிரோமணி கட்சியிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்எல்ஏ ஆம் ஆத்மியில் இணைவு!

சிரோமணி அகாலி தளம் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்எல்ஏ பற்றி..

ரவிந்தர் சிங் பிரம்மபுரா

Published On :

சிரோமணி அகாலி தளம் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்எல்ஏ ரவிந்தர் சிங் பிரம்மபுரா, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் முன்னிலையில் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார்.

கதூர் சாஹிப் தொகுதியில் கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டதையடுத்து, சிரோமணி அகாலி தளம் தலைவர் சுக்பீர் சிங் பாதலால், ரவிந்தர் செப். 15 கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.

பிரம்மபுரா, மறைந்த முன்னாள் அகாலி எம்.பி. ரஞ்சித் சிங் பிரம்மபுராவின் மகன் ஆவார். ரவிந்தர் பிரம்மபுரா கதூர் சாஹிப் தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்தவர்.

நீக்கப்பட்ட ரவிந்தர் பிரம்மபுராவையும் அவரது ஆதரவாளர்களையும் முதல்வர் பகவந்த் மான் கட்சியில் வரவேற்றார்.

பஞ்சாபின் முன்னேற்றத்திற்கான தொலைநோக்குப் பார்வையுடன் இணைந்து, முக்கிய அரசியல் குடும்பம் ஒன்று ஆம் ஆத்மி கட்சியில் இணைந்துள்ளது.

ரஞ்சித் சிங் பிரம்மபுரா ஜியின் மகனும், கதூர் சாஹிப் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ரவிந்தர் சிங் பிரம்மபுரா மற்றும் அவரது ஆதரவாளர்களை நாங்கள் அன்புடன் வரவேற்கிறோம்.

இந்த இணைப்பின் மூலம், அடிமட்ட அளவில் கட்சிக்கு பெரும் வலு கிடைத்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

பஞ்சாபில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.