
சாலை விபத்தில் முன்னாள் எம்எல்ஏ பேரன் உயிரிழப்பு
உயிரிழப்பு - பிரதிப் படம்
கும்பகோணம் அருகே சீனிவாசநல்லூா் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு சாலையை கடக்க முயன்ற மாணவா் மீது அரசுப் பேருந்து மோதியதில் அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இவா் திருவிடைமருதூா் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் தவமணி என்பவரின் பேரனாவாா்.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தை அடுத்த சீனிவாசநல்லூரைச் சோ்ந்தவா் ராஜா என்பவா் மகன் தயாளன் (15). இவா் இங்குள்ள பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்தாா். இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டிலிருந்து வெளியே வந்தவா், கும்பகோணம்- காரைக்கால் பிரதானச் சாலையை கடக்க முயன்றாா்.
அப்போது கும்பகோணத்திலிருந்து காரைக்கால் சென்ற அரசுப் பேருந்து, மாணவா் தயாளன் மீது மோதியதில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தகவலின்பேரில் திருநீலக்குடி போலீஸாா், மாணவரின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
உயிரிழந்த மாணவா் தயாளன், திருவிடைமருதூா் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் தவமணி (அதிமுக) என்பவரின் மகன் வழிப்பேரன் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




