வி.எஸ். பாபு உடலை சுமந்து சென்றார் முதல்வர் விஜய்!ஒரே நேரத்தில் பணியாளர்கள் ராஜிநாமா செய்தனரா? வழிகாட்டுதல் தமிழ்நாடு விளக்கம்திருப்பரங்குன்றம் தீபம்! தேவைப்பட்டால் துணை ராணுவத்தை பயன்படுத்தலாம்!திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்ற அனுமதி! உச்ச நீதிமன்றத்தின் முக்கிய நிபந்தனைகள்!!திருப்பரங்குன்றம்: நிபந்தனையுடன் தீபமேற்ற உச்சநீதிமன்றம் அனுமதிகாவிரி: அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்முதல்வர் விஜய் தலைமையில் நவ. 25-இல் முதலீட்டாளர்கள் மாநாடு!கீர்த்தனாதான் தவெக அரசின் துரந்தரா? எடப்பாடி பழனிசாமி கேள்விகாவிரி நீரை திறந்துவிடுமாறு உத்தரவிடக் கோரிய தமிழக அரசின் மனு தள்ளுபடி! உச்ச நீதிமன்றம்

தர்மம் மீண்டும் வென்றது! திருப்பரங்குன்றம் தீபத் தீர்ப்புக்கு நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

திருப்பரங்குன்றம் தீபம் விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு நயினார் நாகேந்திரன் பேசியது பற்றி..

Nainar Nagendran

பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் - டிஎன்எஸ்

Updated On :

திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவாகரத்தில் தர்மம் மீண்டும் வென்றுள்ளது. உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை பாஜக வரவேற்கிறது என்று பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை கே.பி.சி. நகரில் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை பாஜக மனதார வரவேற்கிறது. தமிழ்நாட்டில் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த இந்தத் தீர்ப்பின் மூலம் தர்மம் மீண்டும் வென்றுள்ளது. தீபம் ஏற்றுவதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியிருப்பது நியாயமான தீர்ப்பாகும்.

1923, 1931, 1996, 2025 எனத் தொடர்ந்து நீதிமன்றத்தை நாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது 2026-லும் அதே விவகாரத்தில் நீதிமன்றத் தீர்ப்பைப் பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்தத் தீர்ப்பை பாஜக வரவேற்கிறது.

ஆனால், தமிழக அரசின் செயல்பாடு மிகுந்த வருத்தமளிக்கிறது. இந்த விவகாரத்தில் கடந்த கால அரசாக இருந்தாலும் சரி, தற்போதைய அரசாக இருந்தாலும் சரி, தீபம் ஏற்றுவதில் பிரச்னையை ஏற்படுத்துவது அரசுதான்.

இந்து சமய அறநிலையத்துறை என்பது கோயில்களைப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்டது. ஆனால், ஒரு கோயிலில் தீபம் ஏற்றக்கூடாது என்று கூறி உச்ச நீதிமன்றம் வரை வழக்குத் தொடர்வது வேதனையளிக்கிறது. பக்தர்கள் கோயில்களுக்கு வழங்கும் காணிக்கைப் பணத்தையே இதுபோன்ற வழக்குகளுக்குச் செலவிடுவது வேடிக்கையாக உள்ளது.

மாவட்ட ஆட்சியருக்கு ஒரு வழக்குரைஞர், இந்து சமய அறநிலையத் துறைக்கு ஒரு வழக்குரைஞர் எனத் தனித்தனியாக நியமித்து வழக்கை நடத்த வேண்டிய அவசியம் என்ன? தமிழகத்தில் மட்டும் ஏன் இத்தகைய நிலை ஏற்படுகிறது?

தீபம் ஏற்ற அனுமதி கோரி உச்ச நீதிமன்றம் வரை வழக்குத் தொடர்ந்ததற்காக எத்தனை கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது? வழக்குரைஞர்களின் கட்டணம், போக்குவரத்துச் செலவு உள்ளிட்ட மொத்தச் செலவு விவரங்களையும் தமிழக அரசு வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.