
பந்துவீச்சில் அசத்தும் இந்தியா ஏ: 87 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் ஆஸி. ஏ!
இந்தியா ஏ அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தடுமாறும் ஆஸ்திரேலியா ஏ அணி குறித்து...

இந்தியா ஏ அணியினர் - படம்: பிசிசிஐ, ஜியோ ஹாட்ஸ்டார்
இந்தியா ஏ அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா ஏ அணி பேட்டிங் தேர்வு செய்தது. தற்போது 87 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்துள்ள ஆஸ்திரேலியா ஏ அணி டெஸ்ட், ஒருநாள் தொடர்களில் விளையாடுகிறது. டெஸ்ட்டில் இந்தியா ஏ 1-0 என வென்றது. தற்போது, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.
முதல் ஒருநாள் போட்டி புதுச்சேரியில் நடைபெற்று வருகிறது. இதில் ஆஸி. ஏ டாஸ் வென்று பேட்டிங் செய்து வருகிறது. தொடக்க வீரர்கள் மிட்செல் ஓவன், சாம் கான்ஸ்டாஸ் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார்கள்.
தற்போது களத்தில் நாதன் மெக்ஸ்வீனி 44, கேப்டன் வில் சதர்லேண்டு 12 ரன்களுடன் விளையாடி வருகிறார்கள். 23 ஓவர்களில் 110/5 ரன்கள் எடுத்துள்ளார்கள்.
இந்தியா ஏ அணி சார்பில் யஷ் தாக்குர் 2, அர்ஷத் கான், சூர்யான்ஷ் ஷெட்கே, நிஷாந்த் சித்து தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளார்கள்.
India A - Playing XI - (Anukul Roy, B Sai Sudharsan, Devdutt Padikkal, Mohd Arshad Khan, Nishant Sindhu, Prabhsimran Singh (Wk), R D Gaikwad (C), Rajat Patidar, Suryansh Shedge, Vipraj Nigam, Y R Thakur)#INDAvAUSA #IndiaASeries #1stOneDay
— BCCI Domestic (@BCCIdomestic) October 6, 2026
Yash Thakur gets the big fish! ð£
— Star Sports (@StarSportsIndia) October 6, 2026
Mitchell Owen departs as India A get their first wicket.ð¥#INDAvAUSA ð Streaming Live Now https://t.co/zk2ABY21JG pic.twitter.com/ptGL7Ho9M1
Summary
India A vs Australia A, 1st unofficial ODI Australia A lose 5 wickets for 87 runs
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







