தவெக எம்எல்ஏக்களுடன் முதல்வர் விஜய் நாளை ஆலோசனை!அக்டோபரில் வாகன விற்பனை 23.8% சரிவு!தமிழகத்தில் 2 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு!தீபாவளி: தமிழ்நாட்டில் 2 நாள்களில் ரூ. 441 கோடிக்கு மது விற்பனை!அதிமுக முன்னாள் எம்எல்ஏ-க்கள் மீதான தகுதி நீக்க நடவடிக்கை: இன்று விசாரணை!

3-வது ஒருநாள்! நியூசி.க்கு எதிராக இந்தியா பந்துவீச்சு!

நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா பந்துவீச்சு தேர்வு செய்யப்பட்டிருப்பது பற்றி...

ind vs nz

நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா பந்துவீச்சு தேர்வு - Photo: X \ BCCI

Updated On :

நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 டி20, இரண்டு டெஸ்ட் மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

ஒருநாள் தொடரில் விளையாடிய முதல் 2 போட்டிகளில் வென்ற இந்திய அணி 2-0 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை வகித்து வரும் நிலையில், மூன்றாவது ஒரு நாள் போட்டி இன்று காலை வெலிங்டனில் நடைபெறுகிறது.

மழை காரணமாக தாமதமாக டாஸ் போடப்பட்ட நிலையில், டாஸ் வென்ற இந்திய கேப்டன் ஷுப்மன் கில், பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார்.

இந்திய அணி எந்த மாற்றமுமின்றி களமிறங்கியிருக்கும் நிலையில் நியூசிலாந்து அணியில் பிளேயர் டிக்னருக்கு பதிலாக மேத்யூ ஃபிஷர் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்திய அணி

ரோஹித் சர்மா, ஷுப்மன் கில் (கேப்டன்), விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், அக்ஷர் படேல், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), நமன் திர், அன்ஷுல் கம்போஜ், அவுகிப் நபி, அர்ஷ்தீப் சிங் மற்றும் குர்னூர் பிரார்.

நியூசிலாந்து அணி

டிம் சீஃபர்ட், வில் யங், ஹென்றி நிக்கோல்ஸ், டேரில் மிட்செல், டாம் லாதம் (விக்கெட் கீப்பர்), கிளென் பிலிப்ஸ், மிட்செல் சான்ட்னர் (கேப்டன்), நாதன் ஸ்மித், கைல் ஜேமிசன், ஜேக்கப் டஃபி மற்றும் மேத்யூ ஃபிஷர் (பிளேயர் டிக்னருக்குப் பதிலாக).

மழை காரணமாக போட்டி 40 ஓவர்களாக குறைக்கப்பட்டிருக்கும் நிலையில், மைதானத்தில் விட்டுவிட்டு மழை பெய்வதால் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

Summary

3rd ODI - India to bowl against New Zealand

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.