மழையால் ஆட்டம் நிறுத்தம்: டிஎல்எஸ் விதியில் வெற்றிபெற்ற இந்தியா!
நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது குறித்து...

இந்திய அணி வீரர்கள் ரோஹித் ஷர்மா, விராட் கோலி - படம் - பிசிசிஐ
நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் டிஎல்எஸ் விதியில் இந்திய அணி வெற்றி பெற்றது.
நியூசிலாந்து நாட்டுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.
இதன் முதல் போட்டியில் இந்தியா வென்ற நிலையில், இரண்டாவது போட்டி, வெலிங்டன், எச்.என்.ஆர்.ஒய். விளையாட்டுத் திடலில் இன்று (நவ. 7) நடைபெற்றது.
மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டு போட்டி 47 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
இதைத்தொடர்ந்து, முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான வில் யங் 6 ரன்களிலும், டிம் செய்பர்ட் ரன் ஏதும் அடிக்காமலும் விக்கெட்டுகளைப் பறிகொடுக்க, ஹென்றி நிக்கோல்ஸ் 11 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதையடுத்து, டேரில் மிட்செல் 55 ரன்களும் சான்ட்னர் 31 ரன்களும் எடுத்த நிலையில், நியூசிலாந்து அணி 41 ஓவர்களில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 134 ரன்கள் எடுத்தது.
இந்த நிலையில், 135 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்களான ரோஹித் ஷர்மா 23 ரன்களுக்கும் அணியின் கேப்டன் ஷுப்மன் கில் ரன்கள் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.
அடுத்து களமிறங்கிய விராட் கோலி 7 ரன்களுக்கும் ஷ்ரேயாஸ் ஐயர் 30 ரன்களுக்கும் ஆட்டமிழக்க 26 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 113 ரன்கள் எடுத்திருந்தபோது மீண்டும் பலத்த மழை பெய்ததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில், ஆட்டத்தை தொடர்ந்து நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. டிஎல்எஸ் விதிமுறைப்படி, வெற்றிக்குத் தேவையான ரன்களில் இந்தியா 4 ரன்கள் முன்னிலையில் இருந்ததால், இந்திய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதன்மூலம் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரில், இந்திய அணி 2-0 என்ற புள்ளிக்கணக்கில் முன்னிலை வகிப்பது குறிப்பிடத்தக்கது.
Summary
The Indian team won the second ODI against New Zealand via the DLS method.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

