மத்திய - மாநில உறவு: திமுக ஆட்சியில் அமைத்த குழுவை ரத்து செய்த தவெக அரசு! மு.க. ஸ்டாலின் கண்டனம்
மத்திய - மாநில உறவுகளை ஆய்வு செய்வதற்காக திமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட குழுவை தவெக அரசு ரத்து செய்ததற்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கண்டனம்

மு.க. ஸ்டாலின் - கோப்புப் படம்
மத்திய - மாநில உறவுகளை ஆய்வு செய்வதற்காக திமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட குழுவை தவெக அரசு ரத்து செய்ததற்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மத்திய - மாநில உறவுகளை ஆய்வு செய்வதற்காக ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் அமைக்கப்பட்ட மத்திய - மாநில உறவுகள் குறித்த உயர்நிலைக் குழுவை முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு கலைத்து உத்தரவிட்டுள்ளது.
திமுக ஆட்சியில் முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலினால் அமைக்கப்பட்ட இந்த குழு கடந்த 2026 பிப்ரவரியில் தனது முதல் அறிக்கையை சமர்ப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மாநில சட்ட ஆணையம் இந்த பணிகளைச் செய்வதால் இந்த சிறப்பு குழு கலைக்கப்படுவதாக அரசு விளக்கம் தெரிவித்துள்ளது.
இந்த குழு, 'மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க காலக்கெடு விதிக்க வேண்டும்', ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்கு எதிர்ப்பு உள்ளிட்ட பரிந்துரைகளை வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த குழு கலைக்கப்பட்டிருப்பதற்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,
"மாநில உரிமைகள் இல்லை, ஆனால் தியேட்டர் உரிமைகளுக்கு தவெக அரசு அனுமதி அளித்துள்ளது" என்ற விதத்தில் பதிவிட்டுள்ளார்.
Centre-State Relations: M.K. Stalin condemns TVK govt scraps committee set up during DMK regime
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

