2027 ஜனவரி 10-இல் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு!9 மணி நேர தொடர் போராட்டம்... தில்லியில் ராகுல், பிரியங்கா கைது!இடைத்தேர்தல்: மதுராந்தகத்தில் 85.97%, தாராபுரத்தில் 80.31% வாக்குகள் பதிவுமேற்கு வங்க இடைத்தேர்தல்: நந்திகிராம் - 80.69%, ரெஜிநகர் - 79.90% வாக்குப் பதிவு!ஆரம்பக் கட்டணம் ரூ. 14 லட்சம்! தமிழ்நாட்டில் அயல்நாட்டு பல்கலை.க்கு அனுமதி: சிபிஎம் கண்டனம்எஸ்ஐஆர்: மோடியும் அமித் ஷாவும் நாட்டை கொள்ளை அடிக்கின்றனர்! ராகுல் பேட்டி!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: அசம்பாவிதமின்றி அமைதியான முறையில் வாக்குப் பதிவு நிறைவுதிருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம்: சிறப்பு தரிசனத்துக்கான முன்பதிவு நாளை தொடக்கம்இடைத்தேர்தல்: மதுராந்தகம், தாராபுரம் உள்பட 6 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவு!பைக் பந்தயம்: சென்னையில் 3 நாள்களில் 2,000 வாகனங்கள் பறிமுதல்!

மாலி பியர்ட்மேன் 4 விக்கெட்டுகள்: 125 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற ஆஸி. ஏ அணி!

இந்தியா ஏ அணியை வீழ்த்திய ஆஸ்திரேலியா ஏ அணி குறித்து...

Mahli Beardman

மாலி பியர்ட்மேன் - படம்: எக்ஸ் / கிரிக்கெட்.காம்.ஏயு

Published On :

ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான இந்தியா ஏ அணியை ஆஸ்திரேலியா ஏ அணி 125 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா ஏ பேட்டிங் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா ஏ 48.2 ஓவர்களில் 274 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்தப் போட்டியில் அதிகபட்சமாக நாதன் மெக்ஸ்வீனி 123 ரன்கள் குவித்து அசத்தினார். கேப்டன் வில் சதல்ர்லேண்டு அதிரடியாக விளையாடி 77 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

அடுத்து விளையாடிய இந்தியா ஏ அணி 31.4 ஓவர்களில் 149 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக ரஜத் படிதார் 53 ரன்கள் எடுத்தார்.

ஆஸ்திரேலியா ஏ சார்பில் பந்துவீச்சில் மாலி பேர்ட்மேன் 4 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். ஸ்பென்சர் ஜான்சன் 2, மிட்செல் ஓவன், டாட் மர்ஃபி, மெக்ஸ்வீனி தலா ஒரு விக்கெட்டும் எடுத்து உதவினார்கள்.

சதம் அடித்த ஆஸ்திரேலிய வீரர் ஆட்ட நாயகனாக மெக்ஸ்வீனி தேர்வானார். மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என ஆஸ்திரேலியா ஏ அணி முன்னிலை வகிக்கிறது. அடுத்த போட்டி அக்.9ஆம் தேதி புதுச்சேரியில் நடைபெற இருக்கிறது.

Summary

1st unofficial ODI Mahli Beardman 4 wickets Australia A won by 125 runs

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.