328 ரன்கள் குவித்த இங்கிலாந்து..! 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் ஆஸி.!
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையேயான கடைசி ஒருநாள் போட்டி குறித்து...

சதம் அடித்த பென் டக்கெட், ஆஸி. வீரர்கள். - ap
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையேயான கடைசி ஒருநாள் ஹொபர்ட்டில் இன்று காலை இந்திய நேரப்படி 9 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 48.3 ஓவர்களில் 328 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதில் அதிகபட்சமாக பென் டக்கெட் 133 ரன்கள் குவித்தார்.
ஆஸ்திரேலியா சார்பில் ஜேக் எட்வர்ட்ஸ் 4 விக்கெட்டுகள், மாட் ரென்ஷா 3 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்கள். தற்போது ஆஸி. பேட்டிங் செய்து வருகிறது.
29 ஓவர்களில் 128 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. இதில் அதிகபட்சமாக மாட் ரென்ஷா 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
கேமரூர் கிரீன் காயம் காரணமாக ரிடையர்ட் ஹர்ட் முறையில் வெளியேறினார். தற்போது களத்தில் கூப்பர் கானலி, ஜேக் எட்வர்ட்ஸ் விளையாடி வருகிறார்கள்.
தொடக்க வீரர்கள் டிராவிஸ் ஹெட் 4, மிட்செல் மார்ஷ் 1 ரன்னுக்கு ஆட்டமிழந்து சொதப்பினார்கள். அலெக்ஸ் கேரி 37 ரன்களில் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.
இந்தத் தொடர் 1-1 என சமநிலையில் இருப்பதால், இந்தப் போட்டி முக்கியமானதாக இருக்கிறது. இங்கிலாந்தின் சோனி பேக்கர் 2 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்.
Summary
England racks up 328 runs..! Australia falters, having lost 5 wickets.!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


