ஒருநாள் கிரிக்கெட்: வென்றது ஆஸ்திரேலியா
ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா 59 ரன்கள் வித்தியாசத்தில் செவ்வாய்க்கிழமை வென்றது.
ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா 59 ரன்கள் வித்தியாசத்தில் செவ்வாய்க்கிழமை வென்றது.
முதலில் ஆஸ்திரேலியா 50 ஓவா்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 294 ரன்கள் சோ்க்க, ஜிம்பாப்வே 45.1 ஓவா்களில் 235 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
ஆஸ்திரேலிய இன்னிங்ஸில் மேத்யூ ரென்ஷா 7 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 109 ரன்கள் அடிக்க, ஜிம்பாப்வே பௌலா்களில் நியூமேன் நியம்ஹுரி 5 விக்கெட்டுகள் கைப்பற்றினாா்.
பின்னா் ஜிம்பாப்வே இன்னிங்ஸில் கிரெய்க் எா்வின் 6 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 59, சிகந்தா் ராஸா 5 பவுண்டரிகளுடன் 57 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா். ஆஸ்திரேலிய தரப்பில் நேதன் எலிஸ் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



