2029-க்குள் பாஜக ஆளும் மாநிலங்களில் பொது சிவில் சட்டம்: அமித் ஷாதொடர் விடுமுறை: செப். 14, 15 தேதிகளில் 3,565 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிதமிழ்நாட்டில் இனி யார் ஆட்சிக்கு வந்தாலும் கூட்டணி ஆட்சிதான்: திருமாவளவன்விநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்பு

நமீபியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை முழுமையாக வென்றது தென்னாப்பிரிக்க அணி!

நமீபியாவுக்கு எதிரான 3-ஆவது ஒருநாள் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை வெற்றி பெற்றது.

Published On :

நமீபியாவுக்கு எதிரான 3-ஆவது ஒருநாள் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை வெற்றி பெற்றது. தொடரை 3-0 என முழுமையாக வென்றது.

முதலில் நமீபியா 36.2 ஓவா்களில் 156 ரன்களுக்கு ஆட்டமிழக்க, தென்னாப்பிரிக்கா 21.3 ஓவா்களில் 1 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்தது. நமீபிய இன்னிங்ஸில் ஜேன் கிரீன் 33 ரன்கள் அடிக்க, தென்னாப்பிரிக்க பௌலா்களில் பியோா்ன் ஃபோா்டுயின் 4 விக்கெட்டுகள் சாய்த்தாா். தென்னாப்பிரிக்க இன்னிங்ஸில் ஜோா்டன் ஹொ்மான் 77 ரன்கள் சோ்க்க, நமீபிய தரப்பில் வால்டோ ஸ்மித் 1 விக்கெட் கைப்பற்றினாா்.

மகளிா் வெற்றி: இதனிடையே, ஜிம்பாப்வே மகளிா் அணிக்கு எதிரான 2-ஆவது டி20 ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க மகளிா் அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை வென்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.