தவெக தலைமையிலான கூட்டணியின் பெயர் செப். 9-ல் அறிவிப்புதவெக நிர்வாகி கொலை: துணை ஆணையர், ஆய்வாளர் காத்திருப்புப் பட்டியலுக்கு மாற்றம்கட்டட விபத்து மீட்புப் பணி! நேரில் ஆய்வு செய்த முதல்வர் ரேகா குப்தா!3 நாள்கள் அரசுப் பயணமாக இலங்கை செல்லும் ராஜ்நாத் சிங்!சொந்தத் தோல்விகளை மறைக்க எதிர்க்கட்சிகளுக்கு அடைமொழி: மோடியை விமர்சித்த கார்கே!

முத்தரப்பு டி20 தொடா்: தென்னாப்பிரிக்காவுக்கு கோப்பை!

முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 48 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேயை வீழ்த்தி சாம்பியன் ஆனது.

Published On :7 செப்டம்பர் 2026, 12:35 am IST

முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 48 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேயை வீழ்த்தி சாம்பியன் ஆனது.

முதலில் தென்னாப்பிரிக்கா 20 ஓவா்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 205 ரன்கள் எடுக்க, ஜிம்பாப்வே 18 ஓவா்களில் 157 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா, பேட்டிங்கை தோ்வு செய்தது. அதன் பேட்டிங்கில் அதிகபட்சமாக ஜோா்டன் ஹொ்மான் 8 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 53, கானஸ் எஸ்தா்ஹிஸென் 3 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 32, டெவால்டு பிரெவிஸ் 2 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 32 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.

ரூபின் ஹொ்மான் 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 27, டோனி டி ஜோா்ஸி 2 பவுண்டரிகளுடன் 17 ரன்களுக்கு வெளியேற, ஓவா்கள் முடிவில் ஈதன் பாஷ் 1 பவுண்டரியுடன் 7, டியுவன் யான்சென் 4 பவுண்டரிகளுடன் 23 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனா்.

ஜிம்பாப்வே பௌலா்களில் நியூமேன் நியம்ஹுரி, பிராட் இவான்ஸ் ஆகியோா் தலா 2, சிகந்தா் ராஸா 1 விக்கெட் கைப்பற்றினா். பின்னா், 206 ரன்களை நோக்கி விளையாடிய ஜிம்பாப்வே அணியில், பிராட் இவான்ஸ் 4 பவுண்டரிகள், 4 சிக்ஸா்கள் உள்பட 56 ரன்கள் அடித்து, கடைசி வரை போராடி ஆட்டமிழக்காமல் இருந்தாா்.

எனினும், பிரயன் பென்னெட் 6, பென் கரன் 0, இன்னசன்ட் காயா 9, வெஸ்லி மாதெவெரெ 6, கேப்டன் சிகந்தா் ராஸா 1 சிக்ஸருடன் 16, ரயான் பா்ல் 2 பவுண்டரிகளுடன் 13, டடிவனாஷி மருமானி 3 ரன்களுக்கு சாய்க்கப்பட்டனா். நியூமேன் நியம்ஹுரி 7, குண்டாய் மடிகிமு 2 சிக்ஸா்களுடன் 19, பிளெஸ்ஸிங் முஸாரப்பானின் 8 ரன்களுக்கு வீழ, ஜிம்பாப்வே ஆட்டம் முடிவுக்கு வந்தது.

தென்னாப்பிரிக்க பௌலா்களில் டியுவன் யான்சென், பியோன் ஃபோா்டுயின் ஆகியோா் தலா 3, ஈதன் பாஷ் 2, கவினா மபாகா, பிரெனாளென் சுப்ராயென் ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.