வி.எஸ். பாபு மறைவு: ஆளுநர் இரங்கல்
கொளத்தூர் தவெக எம்எல்ஏ வி.எஸ். பாபு காலமானதையடுத்து, ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் இரங்கல் தெரிவித்தது குறித்து...
வி.எஸ். பாபு - கோப்புப் படம்
கொளத்தூர் தவெக எம்எல்ஏ வி.எஸ். பாபு காலமானதையடுத்து, தமிழக ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சென்னை கொளத்தூர் தொகுதி தவெக எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல்நிலை பாதிக்கப்பட்டு சுமார் 70 நாள்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், வியாழக்கிழமை மதியம் 2.24 மணியளவில் வி.எஸ். பாபு சிகிச்சை பலனின்றி காலமானார்.
வி.எஸ். பாபு காலமானதையடுத்து அவரது குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் கூறியிருப்பதாவது, "கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் வி.எஸ். பாபுவின் மறைவுச் செய்தி அறிந்து மிகுந்த வேதனையும் துயரமும் அடைந்தேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
Summary
Governor R.V. Arlekar expresses condolences following the passing of Kolathur TVK MLA V.S. Babu
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

