வி.எஸ். பாபு மறைவு: முதல்வர் விஜய்யின் அரசு நிகழ்ச்சிகள் ரத்து!
வி.எஸ். பாபு மறைவைத் தொடர்ந்து முதல்வர் விஜய்யின் அரசு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதைப் பற்றி...
முதல்வர் விஜய்.
கொளத்தூர் தவெக எம்.எல்.ஏ. வி.எஸ். பாபு காலமானதைத் தொடர்ந்து திருச்சியில் நடைபெறவிருந்த முதல்வர் சி. ஜோசப் விஜய்யின் அரசு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் சுமார் ரூ. 134 கோடி மதிப்பீட்டில், 600 படுக்கைகள் வசதியுடன் கூடிய விரிவான மருத்துவ சிகிச்சைக் கட்டடம் கட்டப்பட்டுள்ளது.
இந்தக் கட்டடத்தை முதல்வர் விஜய் நாளை (நவ. 20) திறந்து வைக்க இருந்த நிலையில், இதற்காகச் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதனைத் தொடர்ந்து, தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் நிகழ்விலும் முதல்வர் விஜய் பங்கேற்க இருந்தார்.
இந்த நிலையில், கொளத்தூர் தவெக எம்.எல்.ஏ. வி.எஸ். பாபு காலமானதைத் தொடர்ந்து முதல்வர் விஜய் பங்கற்கவிருந்த திருச்சி நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
முதல்வர் விஜய் போட்டியிட்டு ராஜிநாமா செய்த திருச்சி கிழக்கு தொகுதிக்குள்பட்ட காஜாமலை பகுதியில் நடைபெற இருந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
முன்னதாக, மூச்சுத் திணறல் பிரச்னை காரணமாக, செப். 9ஆம் தேதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கொளத்தூர் தொகுதி வி.எஸ். பாபு, தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த நிலையில் இன்று (நவ. 19) பிற்பகல் 2.24 மணிக்கு மாரடைப்பால் காலமானதாக மருத்துவமனை நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்தது.
வி.எஸ். பாபுவின் மறைவுக்கு முதல்வர் விஜய், ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Summary
Following the passing of V. S. Babu, the TVK MLA for Kolathur, the official government events in Trichy which were to be attended by Chief Minister C. Joseph Vijay have been cancelled.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

