திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: தமிழகம் முழுவதும் ஹிந்து அமைப்பினர் கைது!
திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் தமிழகம் முழுவதும் ஹிந்து அமைப்பினர் கைது செய்யப்பட்டுள்ளது குறித்து...

கோப்புப்படம்
திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் தமிழகம் முழுவதும் ஹிந்து அமைப்பினர் செவ்வாய்க்கிழமை (நவ. 24) கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தின் காரணமாக, தமிழகம் முழுவதும் ஹிந்து அமைப்பினரும், பாரதிய ஜனதா கட்சியினரும் கைது செய்யப்பட்டனர்.
திருப்பரங்குன்றம் மலை உச்சி மீதுள்ள தூணில் திருக்கார்த்திகையன்று தீபம் ஏற்ற வேண்டும் என்று முருக பக்தர்களும், இந்து அமைப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். சில ஆண்டுகளாக இந்த கோரிக்கையை வலியுறுத்தி இந்து அமைப்பினரும் போராட்டங்களும் நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கில், கடந்தாண்டு அந்த தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்டது. இதை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், திருக் கார்த்திகையன்று மட்டும் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று கடந்த வாரம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவு முருக பக்தர்களிடமும், ஹிந்து அமைப்பினரிடமும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கிடையே இடைக்கால உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மறுசீராய்வு மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
இதனால் மலை உச்சியில் தீப தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக குழப்பம் ஏற்பட்டது. இதனால் திருப்பரங்குன்றத்தில் நிலவும் அசாதாரண சூழ்நிலையினால் அங்கு ஆயிரக்கணக்கான போலீஸார் குவிக்கப்பட்டனர்.
இந்த விவகாரத்தினால் தமிழகத்தில் ஏதேனும் அசம்பாவித சம்பவங்களோ, சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்னையோ ஏற்படாமல் இருக்கும் வகையில் மாநிலம் முழுவதும் போலீஸார் உஷார்படுத்தப்பட்டனர்.
முக்கியமாக பேருந்து முனையங்கள்,ரயில் நிலையங்கள், சந்தைகள், வழிப்பாட்டுத் தலங்கள், வணிக வளாகங்கள் ஆகிய இடங்களில் போலீஸார் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் கைது:
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தமிழகம் முழுவதும் ஹிந்து அமைப்பினரும், பாரதிய ஜனதா கட்சியினரும் திருக்கார்த்திகை தினமான செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர்.
முக்கியமாக திருப்பரங்குன்றம் புறப்பட்ட பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன், திருநெல்வேலி தச்சநல்லூரில் கைது செய்யப்பட்டார்.
இதேபோல மேட்டுப்பாளையத்தில் இருந்து திருப்பரங்குன்றத்துக்கு புறப்பட்டு வந்த முன்னாள் மத்திய அமைச்சர் எல். முருகன், கோயம்புத்தூர் அன்னூரில் தடுத்து நிறுத்தப்பட்டார்.
இதேபோல சென்னை, மதுரை, திருச்சிராப்பள்ளி, சேலம், திருநெல்வேலி, கன்னியாகுமரி, கோயம்புத்தூர் உள்பட மாநிலம் முழுவதும் ஹிந்து அமைப்புகள், பாரதிய ஜனதா கட்சி ஆகியவற்றை சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டனர். சிலர் வீட்டுக் காவலிலும் வைக்கப்பட்டனர்.
அதேபோல திருப்பரங்குன்றத்துக்கு புறப்பட்ட நிர்வாகிகள், காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு, திருப்பி அனுப்பப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள், வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையை காவல்துறை தெரிவிக்க மறுத்துவிட்டது.
Summary
Members of Hindu organizations across Tamil Nadu were arrested on Tuesday (Nov. 24) in connection with the Tirupparankundram *deepam* (lamp) issue.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


