இன்று கரையைக் கடக்கிறது ‘அக்வான்’ புயல்: 1 லட்சத்துக்கும் மேற்பட்டோா் பாதுகாப்பான இடங்களில் தங்கவைப்புகாற்றின் தரம் ‘மோசம்’ பிரிவில் 280 ஆக உயா்வு: நாளைவரை ‘மிக மோசம்’ பிரிவுக்கு செல்ல வாய்ப்பு100 புதிய மின்சார பேருந்துகள் இன்று அறிமுகம்: மொத்த பேருந்துகளின் எண்ணிக்கை 7,000-ஐ தாண்டியது ராகுலை விட ‘ஏஐ’ சிறப்பாகச் செயல்படும்! பாஜக விமா்சனம்இந்தியா்களுக்கு ‘விசா’ சலுகை தொடராது: மலேசியா அறிவிப்பு

கருப்பு வேட்டியில் சென்ற ஐயப்ப பக்தர்! அனுமதிக்காத ஐடி நிறுவனத்தை எதிர்த்து ஹிந்து அமைப்பு போராட்டம்!

ஐடி நிறுவனத்தை எதிர்த்து ஹிந்து அமைப்பு போராட்டம் நடத்தியது பற்றி...

hindu

ஹிந்து அமைப்பு போராட்டம் - X

Updated On :

ஹைதராபாத்தில் உள்ள பிரபல ஐடி அலுவலகத்துக்குள் உடை விதிமுறையைப் பின்பற்றாமல், ஐயப்பனுக்கு மாலை அணிந்து கருப்பு வேட்டியில் அலுவலகம் வந்தவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், ஹிந்து அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.

ஹைதராபாத் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள அடிபட்லாவில் உள்ள பிரபல ஐடி நிறுவனத்தில் சபரிமலை ஐயப்பனுக்கு மாலை அணிந்து வந்த ஊழியரை, முறையான உடையில் வரவில்லை எனக் கூறி, அலுவலகத்துக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, அடிபட்லா ஐடி நிறுவனத்தின் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஐயப்ப பக்தர்களும், ஹிந்து அமைப்பினரும் வியாழக்கிழமை இரவு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுதொடர்பாக தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் ஹிந்து அமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தி, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

ஐயப்பனுக்கு மாலை அணிந்து கருப்பு வேட்டி அணிந்து சென்ற மனிஷ் கூறியதாவது:

“நான் கடந்த இரண்டு ஆண்டுகளாக பிரபல ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறேன். நான் ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதம் இருக்கப் போவதாக இரண்டு மாதங்களுக்கு முன்பே நிர்வாகத்திடம் தெரிவித்திருந்தேன். ஆனால் இன்று, நிறுவனத்தின் உடை விதிமுறைகளைப் பின்பற்றவில்லை எனக் கூறி என்னை உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டனர். ஆனால், உடை விதிமுறைகளைப் பின்பற்றாத மற்றவர்களை அவர்கள் உள்ளே அனுமதிக்கிறார்கள். நான் ஐயப்ப விரத உடையில் சென்றால் மட்டும் ஏன் என்னை தடுக்கிறார்கள் என்று புரியவில்லை” எனத் தெரிவித்தார்.

இது குறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “ஐயப்ப விரதம் மேற்கொண்ட ஊழியர் ஒருவரை நிறுவனம் உள்ளே அனுமதிக்கவில்லை என்று கூறி, ஐயப்ப பக்தர்களும் ஹிந்து அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊழியர் ஒருவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இதுவரை எங்களிடம் எந்த அதிகாரப்பூர்வ புகாரும் வரவில்லை. தற்போது நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது, நாங்கள் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்" என்று தெரிவித்தார்.

Summary

Ayyappa devotee wearing a black dress denied entry; Hindu organization protests against IT Company

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.