திருப்பரங்குன்றத்தில் வழக்கமான இடத்தில் ஏற்றப்பட்ட தீபம்!

கார்த்திகை தீபத்தையொட்டி திருப்பரங்குன்ற மலை உச்சியில் வழக்கமான இடத்தில் தீபம் ஏற்றப்பட்டது குறித்து...

kaarthigai deepam

திருப்பரங்குன்ற மலை மீது ஏற்றப்பட்ட மகா தீபம் - படம் - ANI

Updated On :

கார்த்திகை தீபத்தையொட்டி திருப்பரங்குன்ற மலை உச்சியில் வழக்கமான இடத்தில் மகா தீபம் ஏற்றப்பட்டது.

மலையின் மீதுள்ள தூண் மீது தீபம் ஏற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், உச்சிப் பிள்ளையார் கோயில் அருகே உள்ள மண்டபத்தின் மீது மகா தீபம் ஏற்றப்பட்டது.

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மலைமேல் மகா தீபம் ஏற்றும் வைபவம் வெகு சிறப்பாக இன்று (நவ. 24) நடைபெற்றது.

மலை உச்சியிலுள்ள தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்திருந்தது.

இதையடுத்து, இந்த ஆண்டு மலை உச்சியில் தீபம் ஏற்றப்படும் எனப் பொதுமக்களும், பக்தர்களும், இந்து அமைப்பினரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர்.

ஆனால், வழக்கமாக மகா தீபம் ஏற்றப்படும் உச்சிப் பிள்ளையார் கோயில் மண்டபத்தின் மேல் பகுதியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. திருவண்ணாமலையிலிருந்து வருகை தந்த சிறப்புக் குழுவினர் உச்சிப் பிள்ளையார் கோயில் பகுதியில் கொப்பரை அமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

மலையின் மீது 4.5 அடி உயரமும், 70 கிலோ எடையும் கொண்ட தாமரை வடிவக் கொப்பரையில் தீபம் ஏற்றப்பட்டுள்ளது. இதில் 400 கிலோ நெய், 150 மீட்டர் நீளமுள்ள காடா துணி மற்றும் 5 கிலோ சூடம் ஆகியவற்றைப் பயன்படுத்தி மகா தீபம் ஏற்றப்பட்டது.

Summary

Karthigai deepam The lamp was lit at the usual spot in Tirupparankundram

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.