மேற்கு வங்கத்தின் பெயர் மாற்ற தீர்மானத்துக்கு அமைச்சரவை ஒப்புதல்!இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,484 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 25,350 க்கு கீழ் வர்த்தகம்!!முடிவுக்கு வந்த ஏற்றம்! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 30 காசுகள் சரிந்து ரூ. 92.92 ஆக நிறைவு!!மெட்ரோ 2ஆம் கட்டம்: கோயம்பேடு சந்தை - ஆலந்தூர் இடையே யூ-கார்டர்கள் பொருத்தும் பணி நிறைவு!கூட்டணி, ஆதரவு கட்சி எம்எல்ஏக்களுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!எச்பிவி தடுப்பூசி முயற்சியில் இந்தியா புதிய மைல்கல்! புழல் சிறையில் அன்பில் மகேஸை சந்தித்த கனிமொழி எம்.பி.! கள்ளக்குறிச்சி ஆட்சியர் விவகாரம்- விளக்கம் அளிக்கும்படி அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு டெல்டா விவசாயிகளின் குறைகளைக் கேட்க திமுக சார்பில் குழு! மு.க. ஸ்டாலின் அறிவிப்புபுத்தக கொள்முதல் முறைகேட்டில் மேலும் 2 பதிப்பகங்ளுக்கு தொடர்பு: லஞ்ச ஒழிப்புத்துறை தகவல்ஜார்க்கண்டில் கிராம மக்கள் கல்வீச்சு: 12 காவலர்கள் காயம் இந்தியாவுடனான முதல் டெஸ்ட்: போராடி டிரா செய்த நியூசிலாந்து

மலை உச்சிக்குச் சென்றடைந்த மகா தீப கொப்பரை!

திருவண்ணாமலை மலை உச்சியில் மகா தீபம் ஏற்றத் தயாராகும் கொப்பரை பற்றி..

திருவண்ணாமலை உச்சிக்கு கொண்டுச்செல்லப்படும் தீப கொப்பரை

Updated On :

கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை மலையின் மீது ஏற்றப்படும் மகா தீபத்துக்கான கொப்பரை சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டு மலை உச்சிக்குக் கொண்டு செல்லப்பட்டது. 

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் கார்த்திகை மகா தீபத் திருவிழா கடந்த 15-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து விழாவின் 7-ஆம் நாள் பஞ்ச ரதங்களின் தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. 

விழாவின் சிகர நிகழ்வான மகா தீபம் நாளை நடைபெறுவதையொட்டி அதிகாலை 2 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு மூலவா் ஸ்ரீ அருணாசலேஸ்வரா், மூலவா் சன்னதியில் பரணி தீபம் ஏற்றப்படும். மாலை 6 மணிக்கு கோயிலின் பின்புறம் உள்ள 2,668 அடி உயர மலையில் மகா தீபம் ஏற்றப்படுகிறது. 

இதையடுத்து மகா தீபத்துக்கு ஏற்றப்படும் கொப்பரைக்குச் சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர் 20-க்கும் மேற்பட்டோர் மலை உச்சிக்கு மகா தீப கொப்பரையைத் தோளில் சுமந்து சென்றனர். 

பஞ்சலோகத்தால் செய்யப்பட்ட மகாதீப கொப்பரையில் 4,500 லிட்டர் நெய் மற்றும் 1,500 மீட்டர் காடா துணிகளைப் பயன்படுத்தி நாளை மாலை மகாதீபம் ஏற்றப்பட உள்ளது. 

இந்த கொப்பரையை ஏராளமான பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா என்று பக்தி பரவசத்துடன் வணங்கி மலைக்குக் கொண்டு சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.