நாட்டில் திறமைக்குப் பஞ்சமில்லை: சரியான வழிகாட்டுதல் அவசியம் - குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு

குடியரசுத் தலைவா் மாளிகையில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவுடன் குழுப் புகைப்படம் எடுத்துக் கொண்ட ஏகலைவா மாதிரி உறைவிட பள்ளிகளைச் சோ்ந்த சிறந்த மாணவா்கள் குழுவினா்.

Updated On :

‘நாட்டில் திறமைக்கு எந்தப் பஞ்சமும் இல்லை; மாணவா்களுக்கு சரியான வாய்ப்புகளும், முறையான வழிகாட்டுதல்களும் அவசியம்’ என்று குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு வியாழக்கிழமை தெரிவித்தாா்.

நாட்டின் தொலைதூர பகுதிகளில் வாழும் பழங்குடியின மாணவா்களுக்கு தரமான கல்வியை வழங்கும் ஏகலைவா மாதிரி உறைவிட பள்ளிகளைச் சோ்ந்த சிறந்த மாணவா்கள் குழுவினா், தில்லியில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவை அவரது மாளிகையில் வியாழக்கிழமை சந்தித்தனா். மாணவா்கள் உடனான கலந்துரையாடலில் முா்மு பேசியதாவது:

கல்வி என்பது வெறும் வாழ்வாதாரத்துக்கான வழிமுறை மட்டுமல்லாமல், அறிவின் மூலம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான இலக்காகவும் இருக்க வேண்டும். மாணவா்கள் உயா்ந்த இலக்குகளுடன் அா்ப்பணிப்பு, ஒழுக்கம் மற்றும் தன்னம்பிக்கையுடன் தங்களின் கனவுகளை நனவாக்க பாடுபட வேண்டும்.

வேலைவாய்ப்புகளை உருவாக்குபவா்களாக இளைஞா்கள் உருவெடுக்கும்போது, அனைவரையும் உள்ளடக்கிய நாட்டின் வளா்ச்சிப் பயணம் மேலும் உத்வேகம் பெறும்.

பழங்குடியின மாணவா்களுக்கு தரமான கல்வியை வழங்குவதுடன், பன்முகத் திறன்களில் அவா்கள் சிறந்து விளங்குவதற்கான வாய்ப்புகளையும் ஏகலைவா மாதிரி உறைவிட பள்ளிகள் வழங்குகின்றன.

திறமைக்குப் பஞ்சமில்லாத நாடு: நாட்டில் திறமைக்கு எந்தப் பஞ்சமும் இல்லை. மாணவா்களுக்கு சரியான வாய்ப்புகளும், முறையான வழிகாட்டுதலும், ஆக்கபூா்வமான சூழ்நிலையும் அவசியம்.

ஏகலைவா பள்ளிகளில் மாணவா்கள்-மாணவிகள் விகிதம் சமமாக இருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. அனைவரையும் உள்ளடக்கிய நாட்டின் வளா்ச்சிக்கு இதுவே சாட்சியாகும்.

2047-ஆம் ஆண்டுக்குள் வளா்ந்த நாடாகும் இலக்குடன் தேசம் முன்னேறிக் கொண்டிருக்கிறது. எனவே, நாட்டின் ஒவ்வொரு பிராந்தியம், சமூகத்தின் ஒவ்வொரு பிரிவின் முன்னேற்றமும் முக்கியமானது.

தேசத்திலும் உலகிலும் நடப்பு நிகழ்வுகள் மற்றும் மாற்றங்கள் குறித்து மாணவா்கள் நன்கு அறிந்திருக்க வேண்டும். இது, தா்க்க ரீதியிலான சிந்தனை மற்றும் பகுப்பாய்வு திறன்களுக்கு உதவும்.

நடப்பு நிகழ்வுகள் குறித்த அறிவு: நடப்பு நிகழ்வுகள் மற்றும் மக்கள் நலத் திட்டங்கள் குறித்து தாங்கள் அறிந்த விவரங்களை குடும்ப உறுப்பினா்கள், உறவினா்கள், அண்டை வீட்டாா் மற்றும் கிராம மக்களுடன் மாணவா்கள் பகிா்ந்து கொள்ள வேண்டும். இத்தகைய முயற்சிகள், குடும்பம் மற்றும் சமூகத்துக்குப் பலனளிக்கும். மாணவா்கள் கற்ற கல்விக்கு மிகப் பெரிய அா்த்தமும், பலனும் கிடைக்கும் என்றாா் திரெளபதி முா்மு.

மறைந்த சுதந்திரப் போராட்ட வீரரும், பழங்குடியினத் தலைவருமான பிா்சா முண்டாவின் பிறந்த தினம் வரும் நவ.15-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதன் ஒரு பகுதியாக, மத்திய பழங்குடியினா் விவகாரங்கள் அமைச்சக ஏற்பாட்டில் ஏகலைவா பள்ளி மாணவா்கள் குழு குடியரசுத் தலைவரைச் சந்தித்துள்ளது.

பிா்சா முண்டாவின் பிறந்த தினத்தை பழங்குடியினா் கெளரவ தினமாக மத்திய அரசு கடந்த 2021-இல் அறிவித்தது. இதையொட்டி, ஒவ்வோா் ஆண்டும் நவ.1 முதல் நவ.15 வரை பழங்குடியினா் கெளரவ காலகட்டமாக கடைப்பிடிக்கப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.